செய்திகள் :

Mamata Banerjee: "போலி இந்துத்துவம்; இந்து கார்டை பயன்படுத்தாதீர்கள்"- பாஜக தலைவருக்கு மம்தா பதிலடி!

post image

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பேனர்ஜி, "பாரதிய ஜனதா கட்சி அரசியல் ஆதாயத்துக்காக மக்களின் மத உணர்வுகளைப் பயன்படுத்தி, புண்படுத்துகிறது" என வெளிப்படையாகப் பேசியுள்ளார். 

மேற்கு வங்க அரசின் இஸ்லாமிய சட்டமன்ற உறுப்பினர்கள் குறித்து பேசிய எதிர்க்கட்சி தலைவர் சுவேந்து அதிகாரிக்கு பதிலடி கொடுத்த மம்தா, பாஜக அரசின் செயல்களை 'போலி இந்துத்துவம்' எனப் பேசியுள்ளார். 

சுவேந்து அதிகாரி

பிடிஐ அறிக்கையின்படி, சுவேந்து அதிகாரி வருகின்ற மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக ஆட்சிக்கு வந்தால் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் இஸ்லாமிய சட்டமன்ற உறுப்பினர்களை வெளியேற்றுவதாகப் பேசியுள்ளார்.

"உங்களது இறக்குமதி செய்யப்பட்ட இந்து தர்மம் வேதங்களோ அல்லது  ஞானிகளோ கூறியதல்ல. இஸ்லாமிய மக்களின் அடிப்படை உரிமைகளை எப்படி மறுப்பீர்கள்? இது ஒரு ஏமாற்றுத்தனத்தைத் தவிர ஒன்றுமில்லை. நீங்கள் போலியான இந்துத்துவத்தை இறக்குமதி செய்கிறீர்கள்" எனப் பேசியுள்ளார் மம்தா பானர்ஜி. 

பாஜக மக்களின் மத உணர்வுகளை வைத்து மக்களை அரசியல் ரீதியாக மூளைச்சலவை செய்வது குறித்து வருந்திய மம்தா பானர்ஜி, தன்னுடைய இந்து மதம் அவர்களுடையதிலிருந்து வேறுபட்டது எனக் கூறியுள்ளார். 

மம்தா பானர்ஜி

"இந்து கார்ட்டை பயன்படுத்தாதீர்கள்"

"எனக்கு இந்து தர்மத்தைக் காப்பாற்றும் உரிமை இருக்கிறது, ஆனால் உங்களுடைய பதிப்பை அல்ல. தயவுசெய்து இந்து கார்டை பயன்படுத்தாதீர்கள்." என்றார் அவர். 

சுவேந்து அதிகாரி, இந்து மக்களின் மக்கள் தொகை, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை ஆட்சியிலிருந்து அகற்றும் எனப் பேசியதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, "எப்படி உங்கள் தலைவர் இஸ்லாமியர்கள் வெற்றிபெற்றாலும் அவர்களைச் சட்டமன்றத்திலிருந்து நீக்குவதாகப் பேச முடியும்? 33 விழுக்காடு மக்கள் தொகையை எப்படி அகற்றுவார்கள்?" எனக் கூறியுள்ளார். 

மேலும், "இந்த நாட்டுக்கு அதன் தனிப்பட்ட கொள்கைகள் உள்ளன. நான் அவற்றுக்கு எதிராகப் பேசவில்லை. நாம் இந்த மாநிலத்தில் 23% பழங்குடி சகோதர சகோதரிகளைக் கொண்டுள்ளோம், மற்ற சமூகத்தவர்களும் இஸ்லாமியர்களும் உள்ளனர். நாங்கள் அனைத்து மதங்களையும் பாதுகாக்கவும் அமைதியை நிலைநாட்டவும் உறுதிகொண்டுள்ளோம்" எனப் பேசினார்.

`கச்சத்தீவை திரும்பப் பெற வேண்டும் என்பதே பாஜக-வின் கோட்பாடு' - சொல்கிறார் அண்ணாமலை

திருமண நிகழ்வில் கலந்து கொள்வதற்காக தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, சென்னையிலிருந்து விமான மூலம் தூத்துக்குடி வருகை தந்தார். விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறுகையில், ”மும்மொழிக் கொள்... மேலும் பார்க்க

``ஷேக் ஹசீனா மீண்டும் பிரதமராவார்... இந்தியாவுக்கு நன்றி" - அவாமி லீக் கட்சித் தலைவர் கூறுவதென்ன?

கடந்த ஆண்டு வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக உருவான மாணவர் போராட்டம், ஷேக் ஹசீனாவை நாட்டை விட்டு வெளியேறும் அளவு தீவிரமடைந்தது. அதைத் தொடர்ந்து அவர் இந்தியாவில் தஞ்சமடைந்திருக்கிறார். இந்த நிலை... மேலும் பார்க்க

Ranya Rao: `உங்கள் வீட்டு வாசலை எட்டிவிட்டது' - புகைப்படத்தைப் பகிர்ந்து சித்தராமையாவைச் சாடும் பாஜக

கன்னட திரையுலகில் முன்னணி நடிகையான ரன்யா ராவ், தங்கக் கடத்தல் வழக்கில், வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகளால் பெங்களூருவில் கைதுசெய்யப்பட்டு தற்போது 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் இருக்கிறார். தொடைய... மேலும் பார்க்க

'புதின் ஒப்புக்கொள்வார் என்று நினைக்கிறேன்; இல்லையென்றால்...' - போர் நிறுத்தம் குறித்து ட்ரம்ப்

கடந்த மாதம் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இடையேயான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில், நேற்று முன்தினம் சவுதி அரேபியாவில் அமெரிக்க அதிகாரிகள் மற்றும் உக்ரைன் அதிபர்க... மேலும் பார்க்க