செய்திகள் :

Soundarya : `என் மனைவியின் மரணத்துக்கு மோகன் பாபு காரணமா?' - சௌந்தர்யாவின் கணவர் சொல்வதென்ன?

post image
1990களில் தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் குறுகிய காலத்தில் முன்னணி நட்சத்திர நடிகையாக வலம் வந்தவர் செளந்தர்யா.

ரஜினியுடன் 'அருணாச்சலம்', 'படையப்பா', கமலுடன் 'காதலா காதலா', விஜயகாந்த்துடன் 'தவசி', 'சொக்கத்தங்கம்' என தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களுடன் நடித்து கவனம் ஈர்த்தவர். சிறந்த நடிகைக்கான பல விருதுகளையும் வென்றார். திடீரென 2004 மக்களவைத் தேர்தலில் பாஜக-வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார். பிரசாரத்துக்காக பெங்களூரிலிருந்து கரீம்நகருக்கு ஹெலிகாப்டரில் பயணம் செய்யும்போது ஏற்பட்ட விபத்தில் சௌந்தர்யாவும் அவரது சகோதரரும் இறந்தனர். செளந்தர்யா உயிரிழந்து 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்ட நிலையிலும் அவரது மரணத்தில் மர்மங்கள் இருப்பதாகச் செய்திகள் உலா வந்த வண்னமிருக்கின்றன.

செளந்தர்யா

தற்போது இந்த மர்மங்களை மீண்டும் தூசி தட்டும் வகையில் தெலங்கானா மாநிலம், கம்மம் மாவட்டத்தில் சத்யநாராயணபுரம் கிராமத்தில் வசிக்கும் எடுரு கட்லா சிட்டிமல்லு என்பவர், "நடிகர் மோகன் பாபுதான் அவரது மரணத்துக்குக் காரணம். ஐதராபாத் ஷம்ஷாபாத்தின் ஜல்லேபள்ளியில் செளந்தர்யாவுக்கு சொந்தமான ஆறு ஏக்கர் நிலத்தை நடிகர் மோகன் பாபு கேட்டார். ஆனால் சௌந்தர்யாவின் சகோதரர் அமர்நாத் மறுத்துவிட்டார்.

இதனால் ஆத்திரமடைந்த மோகன் பாபு, சௌந்தர்யாவையும் அமர்நாத்தையும் கொலை செய்து விமான விபத்து போல் சித்திரித்துவிட்டார். செளந்தர்யா இறந்த பிறகு அந்த நிலத்தை, நடிகர் மோகன் பாபு ஆக்கிரமித்து விருந்தினர் மாளிகையை கட்டிவிட்டார். அந்த நிலத்தை அரசாங்கம் உடனடியாகக் கையகப்படுத்த வேண்டும்" என்று சிட்டிமல்லு தனது புகார் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இது தெலுங்கு சினிமாவில் சர்ச்சைகளைக் கிளப்பிவிட்டிருக்கிறது.

செளந்தர்யாவின் கணவர் ரகு ஜி.எஸ்

இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மறைந்த செளந்தர்யாவின் கணவர் ரகு ஜி.எஸ், விளக்கம் ஒன்றை அளித்திருக்கிறார். அதில், "கடந்த சில நாள்களாக ஹைதராபாத் நிலம் ஒன்றை தொடர்புபடுத்தி மிஸ்டர் மோகன் பாபு சார் மற்றும் செளந்தர்யா பற்றி போலியான தகவல்கள் உலா வருகின்றன. எனது மறைந்த மனைவி செளந்தர்யாவின் எந்தவொரு நிலத்தையும் மிஸ்டர் மோகன் பாபு சார் ஆக்கிரமிக்கவில்லை என்பதைத் தெளிவாக இங்கு உறுதிபடுத்திக் கொள்கிறேன்.

இதுதொடர்பாக எந்தவொரு பரிவர்த்தனையும் எங்களுக்கிடையே நடக்கவில்லை. மோகன் பாபு சார் எங்கள் குடும்பத்திற்கு நல்ல ஒரு நண்பர். எங்கள் இரு குடும்பமும் பரஸ்பர அன்புடன் பழகி வருகிறோம்.

மோகன் பாபு

எங்களைப் பற்றிப் பரவும் ஹைதராபாத் நிலம் தொடர்பான செய்திகள் அனைத்தும் போலியானவை என்பதை மீண்டும் இங்கு அழுத்தமாகத் தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல செளந்தர்யாவின் மரணத்திற்கும், மோகன் பாபு சாருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. தயவு செய்து இது போன்ற வதந்திகளை, பொய்யானத் தகவல்களைப் பரப்புவதை நிறுத்துங்கள்" என்று கூறியிருக்கிறார். இது சினிமா வட்டாரத்தில் பேசுபொருளாகி வருகிறது.

SSMB29 : மகேஷ் பாபுவுடன் இணையும் பிரியங்கா சோப்ரா; ஒடிஸாவில் படப்பிடிப்பைத் தொடங்கிய ராஜமௌலி!

பாகுபலி, ‘RRR’ போன்ற பிரமாண்ட படங்களின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கும் அடுத்தப் படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிகர் மகேஷ் பாபுவும், பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவும் நடிக்... மேலும் பார்க்க

Kalpana: ``நான் உயிரோட இருக்கக் காரணம் என் கணவர்தான்.... வதந்திகளைப் பரப்பாதீர்கள்'' - பாடகி கல்பனா

பிரபல பின்னணிப் பாடகி கல்பனா ராகவேந்தர், ஹைதராபாத்தில் உள்ள இல்லத்தில் தற்கொலைக்கு முயன்றதாகத் தகவல் வெளியாகின. வீட்டில் சுயநினைவின்றி கிடந்த அவரை, அருகில் வீட்டில் குடியிருந்தவர்கள் மீட்டு தனியார் மர... மேலும் பார்க்க

Game Changer: `எங்களுடைய உழைப்புக்கு சம்பளம் கொடுக்கல' - காவல் நிலையத்தில் புகாரளித்த நடிகர்கள்

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிப்பில் கடந்த மாதம் `கேம் சேஞ்சர்' திரைப்படம் வெளியாகியிருந்தது.தில் ராஜு தயாரித்திருந்த இத்திரைப்படத்திற்கு தற்போது ஒரு சிக்கல் வந்திருக்கிறது. இப்படத்தின் கா... மேலும் பார்க்க

Pushpa 2: "புஷ்பா படத்தைப் பார்த்து மாணவர்கள் கெட்டுப்போறாங்க" - தெலுங்கானா ஆசிரியர் சொல்வது என்ன?

'புஷ்பா-2' படத்தைப் பார்த்து மாணவர்கள் கெட்டுப் போய்விட்டதாக ஹைதராபாத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியை ஒருவர் பேசியிருப்பது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.கடந்த 2021 ஆம் ஆண்டு, சுகுமார் இயக்கத்... மேலும் பார்க்க

புஷ்பா திரைப்பட நடிகருக்கு திருமணம்: நீண்ட காலக் காதல் கைக் கூடியது; காதலியை சந்தித்தது எப்படி?

சமீபத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்த புஷ்பா 2: தி ரூல் படத்தில் ஜாலி ரெட்டியாக நடித்தவர் டாலி தனஞ்சயா. சமீபத்தில் வெளியான ஜிப்ரா திரைப்படத்தில் இவரின் நடிப்பு வெ... மேலும் பார்க்க

porsche Car: `இது தம்பிக்கு அண்ணன் கொடுக்கும் அன்புப் பரிசு...' - தமன் குறித்து பாலய்யா நெகிழ்ச்சி

தமிழ் சினிமாவில் அவ்வப்போது எண்ட்ரி கொடுத்தாலும், தெலுங்கு சினிமாவின் உச்சத்தில் வலம் வருபவர் இசையமைப்பாளர் தமன்.பிரபல தெலுங்கு நடிகரான நந்தமூரி பாலகிருஷ்ணாவின், சமீத்திய திரைப்படங்களான 'Akhanda, Veer... மேலும் பார்க்க