அனல் மின் நிலையங்களின் செயல்பாடு: ஜெ.ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு
porsche Car: `இது தம்பிக்கு அண்ணன் கொடுக்கும் அன்புப் பரிசு...' - தமன் குறித்து பாலய்யா நெகிழ்ச்சி
தமிழ் சினிமாவில் அவ்வப்போது எண்ட்ரி கொடுத்தாலும், தெலுங்கு சினிமாவின் உச்சத்தில் வலம் வருபவர் இசையமைப்பாளர் தமன்.
பிரபல தெலுங்கு நடிகரான நந்தமூரி பாலகிருஷ்ணாவின், சமீத்திய திரைப்படங்களான 'Akhanda, Veera Simha Reddy, Bhagavanth Kesari, Daaku Maharaaj' படங்களுக்குத் தொடர்ச்சியாக அதிரடியான பின்னணி இசையுடன் இசையைமைத்தவர் தமன். 'Akhanda' படத்தின் பிஜிஎம் பெரும் வரவேற்பைப் பெற்று பாலய்யா ரசிகர்களின் ரிங் டோனாகவே இருந்தது. இதையடுத்து 'Akhanda 2: Thandavam' ரெடியாகிக் கொண்டிருக்கிறது. அதற்கும் தமன்தான் இசை.
Bond beyond cinema! ❤️❤️ #NandamuriBalakrishna garu gifted a grand Porsche car to our sensational NBK Thaman S garu ❤️ pic.twitter.com/catpIuq17w
— Nandamurimokshagna.com (@mokshu_fans) February 15, 2025
தமன் பலமுறை பாலய்யா குறித்து நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார். 'என்னோட அம்மா அடிக்கடி போன் பண்ணி எதாவது மந்திரம் சொல்வாங்க. அதுமாதிரி பாலகிருஷ்ணா காரு அடிக்கடி வந்து என்னை ஊக்குவிக்கும் விதமாக நல்ல வார்த்தைகளைச் சொல்லிக் கொண்டே இருப்பார்" என்று நெகிழ்ந்திருக்கிறார் தமன்.
இந்நிலையில் திடீரென பாலய்யா, தமனுக்கு 'போர்ஷே' சொகுசுக் காரைப் பரிசாக வழங்கியிருக்கிறார். இதுகுறித்து பாலய்யா, "இரண்டு ஜெனரேஷன் இசையமைப்பாளர்களைப் பார்த்து வருகிறேன். என் தம்பி தமன் ஒரு நல்ல இசையமைப்பாளர். இது தம்பிக்கு அண்ணன் கொடுக்கும் அன்புப் பரிசு" என்று நெகிழ்ச்சியுடன் பேசியிருக்கிறார்.