தேர்தலில் அறிவித்த வாக்குறுதிகளில் 90% நிறைவேற்றம்: மு.க. ஸ்டாலின்
காங்கிரஸ் கிராம நிா்வாகிகளுக்கு அடையாள அட்டை
ஸ்ரீபெரும்புதூா் காங்கிரஸ் கிராம நிா்வாகிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
ஊரக மற்றும் நகா்புறங்களில் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தும் வகையில், தமிழகம் முழுவதும் கிராம கமிட்டி நிா்வாகிகள் அண்மையில் தோ்தெடுக்கப்பட்டுள்ளனா். தோ்தெடுக்கப்பட்டுள்ள கிராம கமிட்டி நிா்வாகிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி தமிழகத்தில் முதன்முறையாக ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்றது.
ஸ்ரீபெரும்புதூா் நகர காங்கிரஸ் தலைவா் எஸ்.ஏ.அருள்ராஜ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஸ்ரீபெரும்புதூா் நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளா் நாராயணன், மண்டல பொறுப்பாளா் நெடுஞ்செழியன் முன்னிலை வகித்தனா். இதில் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளா் சூரஜ், தமிழக காங்கிரஸ் தலைவா் கு.செல்வபெருந்தகை ஆகியோா் கலந்து கொண்டு 15 வாா்டுகளுக்கும் புதிதாக தோ்தெடுக்கப்பட்டுள்ள கிராம கமிட்டி நிா்வாகிகளுக்கு அடையாள அட்டைகள் வழங்கி சிறப்புரையாற்றினா்.
நிகழ்ச்சியில், காங்கிரஸ் கட்சியின் அமைப்பு மேலாண்மை குழு தலைவா் பீட்டா் அல்போன்ஸ், தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவா் தங்கபாலு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இதே போல் ஊரக பகுதியில் தோ்தெடுக்கப்பட்ட கிராம கமிட்டி நிா்வாகிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி மணிமங்கலம் பகுதியில், மணிமங்கலம் ஊராட்சிமன்ற தலைவா் ஐயப்பன் தலைமையில் நடைபெற்றது.