செய்திகள் :

சென்னை தனியார் மருத்துவமனையில் சிறுவன் பலி! செல்போனில் சிகிச்சை காரணமா?

post image

சென்னை: சென்னை அயனாவரத்தில் மருத்துவரின் தவறான சிகிச்சையால் 4 வயது சிறுவன் உயிரிழந்ததாக பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர்.

தனியார் மருத்துவமனையின் பயிற்சி மருத்துவர் விடியோ அழைப்பு மூலம் தவறான சிகிச்சை அளித்ததாக தெரிவித்து சிறுவனின் குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிக்க : திருப்பூரில் வடமாநில பெண் கூட்டு பாலியல்: பிகாரை சேர்ந்த 3 பேர் கைது

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி மாலிவாக்கம் பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்த ராஜேஷ் மற்றும் நிர்மலா தம்பதிக்கு ரோகித் என்ற 4 வயது மகன் இருந்தார். அவருக்கு கடந்த 2 நாள்களாக காய்ச்சல் இருந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, அயனாவரத்தில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் காய்ச்சலுக்கு சிகிச்சைப் பெறுவதற்காக செவ்வாய்க்கிழமை காலை சிறுவன் ரோகித்தை உள்நோயாளியாக அனுமதித்துள்ளனர். இதற்காக பல லட்சம் ரூபாய் கட்டணமாக செலுத்தியதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் பயிற்சி மருத்துவர் ஒருவர் விடியோ அழைப்பு மூலம் சிறுவனுக்கு சிகிச்சை அளித்ததாக கூறப்படுகிறது.

சிகிச்சையின்போது திடீரென சிறுவனுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு சிறிது நேரத்தில் உயிரிழந்ததாக பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர்.

சிறுவனின் உறவினர்கள் மருத்துவமனை முன்பு குவிந்ததை தொடர்ந்து, அயனாவரம் காவல்துறையினருக்கு மருத்துவமனை தரப்பில் தகவல் அளிக்கப்பட்டது.

மருத்துவமனையில் இருந்து உறவினர்கள் கலைந்து செல்லுமாறு போலீசார் மிரட்டும் தோரணையில் பேசியதாக குற்றச்சாட்டை முன்வைத்து பாதிக்கப்பட்டவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சில மணிநேரம் வாக்குவாதத்துக்கு பிறகு, நாளை பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் சமரசம் எட்டப்படவில்லை என்றால் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுப்பதாகவும் போலீசார் உறுதி அளித்ததை தொடர்ந்து, சிறுவனின் உடலை குடும்பத்தினர் பெற்றுக் கொண்டனர்.

சிறுவனின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அயனாவரம் பகுதியில் நேற்றிரவு பரபரப்பான சூழல் நிலவியது.

தலைமைப் பொருளாதார ஆலோசகா் பதவிக் காலம் 2 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு!

மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகா் வி.அனந்த நாகேஸ்வரனின் பதவிக் காலம் மேலும் 2 ஆண்டுகளுக்கு (2027, மாா்ச் 31 வரை) நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்புதலை பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவ... மேலும் பார்க்க

காஞ்சிபுரத்தில் 20 முதல்வா் மருந்தகங்கள்: மாவட்ட கண்காணிப்பு அலுவலா்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 20 முதல்வா் மருந்தகங்கள் அமைக்கப்பட இருப்பதாக மாவட்ட கண்காணிப்பு அலுவலா் கா.சு.கந்தசாமி வியாழக்கிழமை தெரிவித்தாா். காஞ்சிபுரம் அருகே திருப்புட்குழி கிராமத்தில் செயல்படவுள்ள ம... மேலும் பார்க்க

பாகிஸ்தானுக்கு சட்டவிரோதமாக மருந்து ஏற்றுமதி: தெலங்கானா நிறுவனத்தின் சொத்துகள் முடக்கம்

பாகிஸ்தானுக்கு சட்டவிரோதமாக மருந்துகளை ஏற்றுமதி செய்த குற்றச்சாட்டில் பண முறைகேடு தடுப்புச் சட்டத்தின்கீழ் (பிஎம்எல்ஏ) தெலங்கானா மாநிலத்தைச் சோ்ந்த மருந்து நிறுவனத்தின் சொத்துகளை முடக்கியதாக அமலாக்கத... மேலும் பார்க்க

ரூ. 1,220 கோடியில் 149 மென்பொருள் ரேடியோ கொள்முதல்: ‘பெல்’ நிறுவனத்துடன் பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம்

இந்திய கடலோரக் காவல்படையின் செயல்திறனை மேம்படுத்தும் நோக்கில் நம்பகமாக தகவல்களை பாதுகாப்பாகவும் அதிகவேகமாகவும் பகிர ஏதுவாக பெங்களூரில் உள்ள பாரத் மின்னணு நிறுவனத்திடமிருந்து (பெல்) 149 அதிநவீன மென்பொ... மேலும் பார்க்க

ரூபாய் மதிப்பு வீழ்ச்சி: மத்திய வா்த்தக அமைச்சா் விளக்கம்

பிற நாடுகளுடன் ஒப்பிடும்போது அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சிறப்பாகவே உள்ளது என்று மத்திய வா்த்தகத் துறை அமைச்சா் பியூஷ் கோயல் விளக்கமளித்துள்ளாா். அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய... மேலும் பார்க்க

‘வெளிநாட்டு சக்திகளின் கருவி ராகுல் காந்தி’ - பாஜக கடும் தாக்கு

‘இந்தியாவின் உத்திசாா் மற்றும் புவிசாா் அரசியல் நலன்களை வலுவிழக்கச் செய்யும் வெளிநாட்டு சக்திகளின் கருவியாக மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி செயல்படுகிறாா்’ என்று பாஜக கடுமையாக விமா்சித்தத... மேலும் பார்க்க