சூரியசக்தி மின் உற்பத்தி நிலையங்கள்: இந்தியா-இலங்கை இடையே உடன்பாடு
குழந்தையின் கழுத்தில் கத்தி வைத்து தாயிக்குப் பாலியல் வன்கொடுமை; திருப்பூரில் அரங்கேறிய கொடூரம்
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 27 வயது பெண்ணும், அவருடைய கணவரும் தங்களுடைய மூன்று வயது குழந்தையுடன் திருப்பூருக்குக் கடந்த 17-ஆம் தேதி வேலை தேடி வந்துள்ளனர். திருப்பூரில் பல இடங்களில் வேலை தேடி அலைந்துள்ளனர். ஆனால், எங்குமே வேலை கிடைக்காத நிலையில் புஷ்பா ரயில்வே சந்திப்பு அருகே அப்பெண்ணும், அவருடைய கணவரும் குழந்தையுடன் நின்றுள்ளனர்.
இதை நோட்டமிட்ட பிகார் மாநிலத்தைச் சேர்ந்த முகமது நதிம் (24), முகமது டேனிஸ் (25) மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோர் தங்களின் பனியன் நிறுவனத்தில் வேலைக்கு ஆட்கள் தேவை எனக் கூறி, லட்சுமி நகர்ப் பகுதியில் உள்ள அவர்கள் தங்கியிருந்த அறைக்குப் பெண், கணவர் மற்றும் குழந்தையை அழைத்துச் சென்றுள்ளனர்.
இரவு தங்கள் அறையில் தங்கிக் கொள்ளலாம் எனத் தெரிவித்த மூவரும், அவர்களுக்கு உணவும் வாங்கித் தந்துள்ளனர். இந்நிலையில், நள்ளிரவில், அப்பெண்ணை முகமது நதிம், முகமது டேனிஸ் மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய மூவரும் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளனர். இதைத் தடுத்த அப்பெண்ணின் கணவரை மூவரும் சேர்ந்து கடுமையாகத் தாக்கி கட்டிப் போட்டுள்ளனர்.

பின்னர், அவர்களின் 3 வயதுக் குழந்தையின் கழுத்தில் கத்தி வைத்து மிரட்டி, பெண்ணை மூன்று பேரும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதை வெளியில் கூறினால் கொன்று விடுவதாக மிரட்டி அங்கிருந்து அனுப்பி வைத்துள்ளனர். அங்கிருந்து வெளியேறிய அக்குடும்பத்தினர் வடக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இப்புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸார் முகமது நதிம், முகமது டேனிஸ் மற்றும் 17 வயது சிறுவனைக் கைது செய்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட பெண் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். வேலை தேடி வந்த பெண்ணின் குழந்தையின் கழுத்தில் கத்தி வைத்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் திருப்பூர் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்!
https://tinyurl.com/Velpari-Vikatan-Play