` வழக்கறிஞர் மீது தாக்குதல்' -திமுக அலுவலம், காவல் நிலையத்தை முற்றுகையிட்டு வழக்கறிஞர்கள் போராட்டம்
திண்டுக்கல் அண்ணாநகரைச் சேர்ந்தவர் உதயகுமார்43. இவர் திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கறிஞராக உள்ளார். திண்டுக்கல் திமுக அலுவலகம் அருகே உள்ள தனியார் பள்ளியில் படிக்கும் இவரின் மகளை அழைக்க டூவிலரில் சென்றுள்ளார். அந்த பகுதியில் சாலையோர மரக்கிளைகள் வெட்டப்பட்டு பலநாள்களாக அகற்றப்படாமல் போக்குவரத்துக்கு இடையூறாக கிடந்துள்ளது. அதனை அகற்றுவது குறித்து விசாரித்தவர், அப்பகுதிக்கு வந்திருந்த அமைச்சர் ஐ.பெரியசாமியை சந்தித்து முறையிட சென்றிருக்கிறார்.

அப்போது கட்சி அலுவலகத்திற்கு அமைச்சர் ஐ.பெரியசாமியுடன் பாதுகாப்புக்கு வந்திருந்த போலீஸார், மற்றும் திண்டுக்கல் மாநகராட்சி 7 வது வார்டு கவுன்சிலர் சுபாஸ் உள்ளிட்டோர் தாக்கினர்.
மேலும், அவரை கட்சி அலுவலகத்திற்குள் இருந்த கழிப்பறைக்கு தூக்கிச் சென்று கழிப்பறையை கழுவச் சொல்லி தாக்கினர் என உதயகுமார் போலீஸாரிடம் புகார் அளித்துள்ளார்.
அதனடிப்படையில், அமைச்சரின் பாதுகாப்பு எஸ்.எஸ்.ஐ., ரவி, கவுன்சிலர் சுபாஸ் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல சுபாஸ் தரப்பில் கொடுக்கப்பட்ட புகாரின் பேரில், உதயகுமார் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து நம்மிடம் பேசிய வழக்கறிஞர் சங்கத்தினர், உதயகுமார் திண்டுக்கல் மாவட்ட நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தின் முன்னாள் செயலாளர் ஆவர். அவர் மகளை பள்ளிக்கு அழைக்கச் சென்ற போது சாலையோரத்தில் கிடந்த மரக்கிளைகளை அகற்றுவது குறித்து பள்ளி வாட்ச்மேனிடம் விசாரித்துள்ளார். அருகே இருந்த திமுக அலுலகத்தில் செயற்குழு கூட்டம் நடந்திருக்கிறது. அதுகுறித்து அங்கு வந்திருந்த அமைச்சர் ஐ.பெரியசாமியை சந்தித்து முறையிட உதயகுமார் சென்றிருக்கிறார்.

அவரை தடுத்த அமைச்சரின் பாதுகாப்பு எஸ்.எஸ்.ஐ., ரவி உள்ளிட்ட போலீஸார், இதுகுறித்து மாநகராட்சியில் கூறி நடவடிக்கை எடுக்கச் சொல்கிறோம் எனக் கூறியிருக்கின்றனர். அதையேற்க மறுத்த உதயகுமார், கட்சி அலுவலகத்திற்குள் செல்ல முயன்றார். அப்போது அமைச்சரின் பாதுகாப்பு போலீஸாரும், சுபாஸ் மற்றும் திமுகவினர் சிலரும் உதயகுமாரை சரமாரியாக அடித்துள்ளனர்.
தகவலறிந்து சென்று அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துவிட்டு, போலீஸாரிடம் புகார் அளிக்கச் சென்றால் போலீஸார் புகாரை ஏற்கவில்லை. இதனால் திமுக கட்சி அலுவலக்தையும், திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலையத்தையும் முற்றுகையிட்டோம். அப்போதும் காவல் அதிகாரிகள் எங்களை அலட்சியப்படுத்தினர். இதனால் அண்ணாசிலை ரவுண்டானா பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டோம்.
நேற்று இரவு முதல் இன்று மதியம் வரை காவல்நிலைத்தை முற்றுகையிட்டதால் தான் தாக்குதல் நடத்தியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதுமட்டும் போதுமானது கிடையாது எஸ்.எஸ்.ஐ., ரவியை சஸ்பெண்ட் செய்யவேண்டும், கவுன்சிலர் சுபாஸை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்" என்றனர்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய போலீஸார், "வழக்கறிஞர் உதயகுமார் அதிமுக ஆதரவாளர். அவர் தான் பிரச்னையை பெரிது படுத்த முயன்றார். அதை அமைச்சர் பாதுகாப்பில் இருந்த போலீஸார் தடுக்க மட்டுமே செய்துள்ளனர். வழக்கறிஞர்களின் அழுத்தத்தை தொடர்ந்து இருதரப்பிலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது" என்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs