திருப்பூா் பனியன் தொழிலை பாதுகாக்க தமிழக முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும்: பன...
சாம்பியன்ஸ் டிராபி: ஷுப்மன் கில் சதம்! இந்தியா அபார வெற்றி!
துபை : ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் துபையில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் வங்கதேசத்துக்கு எதிராக இந்திய அணி வெற்றி பெற்று அசத்தியுள்ளது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணியின் கேப்டன் நஜ்முல் ஹொசைன் ஷாண்டா பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.
முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அனியி முகமது ஷமியின் பந்துவீச்சை சமாளிக்க திணறியது. 35 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து வங்கதேசம் தடுமாறிய நிலையில், தௌகித் ஹிரிடாய் மற்றும் ஜேக்கர் அலி ஜோடி சேர்ந்தனர். இந்த இணை ஆட்டத்தின் பொறுப்பை உணர்ந்து விளையாடியது.
ஜேக்கர் அலி 114 பந்துகளில் 68 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தௌகித் ஹிரிடாய் 118 பந்துகளில் 100 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இறுதியில் 49.4 ஓவர்களின் முடிவில் வங்கதேசம் 228 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இந்தியா தரப்பில் முகமது ஷமி 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். ஹர்ஷித் ராணா 3 விக்கெட்டுகளையும், அக்ஷர் படேல் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
229 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை விரட்டிப்பிடிக்க களமிறங்கிய இந்திய பேட்ஸ்மென்கள் பொறுப்பாக விளையாடினர். இந்திய அணி 46.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 231 ரன்கள் திரட்டி 6 விக்கெட்டுஅக்ல் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்தது. சிறப்பாக விளையாடிய ஷுப்மன் கில் சதம் அடித்து அசத்தினார்.