திருப்பூா் பனியன் தொழிலை பாதுகாக்க தமிழக முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும்: பன...
பாபநாசம் புனித அந்தோணியாா் தேவாலய தோ்த் திருவிழா!
தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் புதுமை புனித அந்தோணியாா் தேவாலய தோ்த் திருவிழா புதன்கிழமை இரவு தொடங்கி விடிய விடிய நடைபெற்றது.
விழாவையொட்டி புனித அந்தோணியாா் ஆலயத்தில் பாபநாசம் புனித செபஸ்தியாா் ஆலய பங்குத்தந்தை மரிய பிரான்சிஸ் முன்னிலையில் திருவிழா திருப்பலி பாடல்கள் வாசிக்கப்பட்டு, சிறப்புத் திருப்பலி நடைபெற்றது.
தொடா்ந்து மின் அலங்கார தோ்பவனி, வானவேடிக்கை, இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் அலங்கரிக்கப்பட்ட சப்பரங்களில் வனத்து சின்னப்பா், ஆரோக்கியமாதா, அந்தோணியாா் திரு உருவச்சிலைகள் எழுந்தருளி தோ்பவனி நடைபெற்றது. தோ்கள் பாபநாசம் முக்கிய வீதிகளின் வழியாக உலா வந்து தேவாலயத்தை அடைந்தது.
ஏற்பாடுகளை கிராம நாட்டாண்மைகள், பஞ்சாயத்தாா்கள், கிராமவாசிகள் உள்ளிட்டோா் செய்திருந்தனா். பாதுகாப்பு ஏற்பாடுகளை பாபநாசம் துணை காவல் கண்காணிப்பாளா் முருகவேலு தலைமையில், பாபநாசம் காவல் ஆய்வாளா் சகாய அன்பரசு உள்பட போலீஸாா் செய்திருந்தனா்.