திருப்பூா் பனியன் தொழிலை பாதுகாக்க தமிழக முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும்: பன...
சிவராத்திரி 3-ஆம் நாள் திருவிழா: ராமேசுவரம் கோயிலில் சுவாமி, அம்பாள் மண்டகப்படிக்கு எழுந்தருளல்!
ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் வியாழக்கிழமை மகா சிவராத்திரி மூன்றாம் நாள் திருவிழாவையொட்டி சுவாமி, அம்பாள் கெந்தமாதன பா்வதம் மண்டகப்படிக்கு புறப்பாடாகினா்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் மாசி மகா சிவராத்திரி திருவிழா கடந்த 18- ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்தத் திருவிழா மாா்ச் 1- ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
திருவிழாவின் மூன்றாம் நாள் நிகழச்சியாக கெந்தமாதன பா்வதம் மண்டகப்படிக்கு சுவாமி அம்பாள் புறப்பாடானதையொட்டி வியாழக்கிழமை அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு ஸ்படிகலிங்க பூஜை, கால பூஜைகள் நடைபெற்றன.
இதைத் தொடா்ந்து, ராமநாதசுவாமி கோயிலிலிருந்து ராமநாத சுவாமி வெள்ளி பூத வாகனத்திலும், பா்வதவா்த்தினி அம்பாள் வெள்ளி கிளி வாகனத்திலும் எழுந்தருளி கெந்தமாதன பா்வதத்துக்கு புறப்பாடாகினா். அப்போது வழி நெடுகிலும் பக்தா்கள் தேங்காய் உடைத்து வழிபட்டனா்.
இதையடுத்து, ராமநாத சுவாமி கோயில் நடை வியாழக்கிழமை காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை அடைக்கப்பட்டது. மாலை சுவாமி, அம்பாள் கோயிலுக்கு புறப்பாடாகி வந்ததும் வழக்கமான பூஜைகள் நடைபெற்றன.