செய்திகள் :

விஷக் கடியால் உயிரிழந்த சிறுமி; ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்ட உறவினர்கள் - என்ன நடந்தது?

post image

தென்காசி மாவட்டம், இந்த சிவகிரி அருகே உள்ள தென்மலையை சேர்ந்தவர் சுப கார்த்திகா (வயது 9). இவர் வீட்டு அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது அவருக்கு காலில் ஏதோ அடிபட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அடிபட்ட இடத்தில் சுப கார்த்திகாவுக்கு இரவில் வீக்கமும், வலியும் ஏற்படவே தனக்கு காயம் ஏற்பட்டதை வீட்டில் பெற்றோர்களிடம் கூறியுள்ளார்.

போராட்டம்

இதைக்கவனித்த உறவினர்கள், ஏதேனும் விஷ கடியாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் சுப கார்த்திகாவை தென்மலை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது அங்கு பணியில் இருந்த செவிலியர், உடனடியாக சிறுமியை சிவகிரி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படி தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து சிகிச்சைக்காக, சிவகிரி நோக்கி டூவீலரில் அழைத்துச் செல்லும் வழியில் சிறுமி சுப கார்த்திகா உயிரிழந்தார். சிறுமி உயிரிழந்ததையடுத்து ஆத்திரமடைந்த அவரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், தென்மலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

முற்றுகை

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வாசுதேவநல்லூர் போலீஸார் போராட்டக்காரர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது பேசிய சிறுமியின் உறவினர்கள், "சுப கார்த்திகாவுக்கு சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவமனைக்கு கொண்டுவந்த பிறகும் கூட சிறுமியை தொட்டு அவளுக்கு என்ன பிரச்னை என்பதை செவிலியர் பார்க்கவில்லை. மாறாக எந்த முதலுதவி சிகிச்சையும் அளிக்காமல் சிவகிரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படி கூறினார். இரவு நேரத்தில் இங்கு டாக்டர்கள் யாரும் பணியில் இல்லை. அதுபோல விஷ முறிவுக்கான மருந்துகளும் கிடையாது, ஆகவே இங்கிருந்து வெளியேறி சிவகிரி மருத்துவமனைக்கு செல்லுங்கள் என விரட்டியடித்தார். சிறுமியை, மருத்துவமனைக்கு விரைவாக கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் வசதிகூட செய்துதரவில்லை.

இந்த நிலையில் நாங்களே எங்களின் குழந்தையை டூ-வீலரில் சிகிச்சைக்காக அழைத்து சென்றோம். அப்போதுதான் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்துவிட்டார். சிறுமி உயிரிழந்ததற்கு தென்மலை மருத்துவமனையில் மருத்துவர்கள் பணியில் இல்லாததும், முதலுதவி சிகிச்சை அளிக்காததுமே காரணம். ஆகவே சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறினர். இதையடுத்து பேசிய போலீஸார், "சிறுமி உயிரிழந்ததற்கான உண்மையான காரணம் தெரியவந்த பின்பு விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறினர். இதை ஏற்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அனைவரும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

பேச்சுவார்த்தை

சம்பவம் தொடர்பாக தென்காசி மருத்துவ பணிகள் துணை இயக்குநர் கோவிந்தனிடம் விளக்கம் கேட்டோம். அப்போது அவர், "தென்மலையில் செயல்படுவது கூடுதல் அரசு ஆரம்ப சுகாதார நிலையம். இரவு நேரத்தில் கூடுதல் மருத்துவமனையில் மருத்துவர்கள் பணியில் இருப்பதில்லை. அதுபோல ஆம்புலன்ஸுக்கு தகவல் கொடுத்து, அதன் பின் ஆம்புலன்ஸ் மருத்துவமனைக்குச் சென்று அங்கிருந்து சிறுமியை சிவகிரி அழைத்து வருவதற்கு மேலும் அதிகம் நேரம் விரயமாகும் என்பதால் சிறுமி சுப கார்த்திகாவை சிவகிரி மருத்துவமனைக்கு உடனே கொண்டு செல்ல செவிலியர் அறிவுறுத்தியுள்ளார். மேலும் தென்காசி மாவட்டத்தில் அனைத்து மருத்துவமனைகளிலுமே விஷ முறிவுக்கான மருந்துகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. சிறுமி சுப கார்த்திகா இறந்த சம்பவத்தில் அவரின் உடல் கூறாய்வு செய்யப்பட்டு அறிக்கை வந்த பின்பே உண்மையான காரணம் வெளிப்படும். அந்த அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது தென்மலையில் நடந்த போராட்டம் மற்றும் மருத்துவமனை செவிலியர் மீது சொல்லப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து துறை ரீதியான விசாரணை நடைபெற்று வருகிறது" என்றார்.

`அரசு பள்ளியில் கழிவறை வசதி இல்லை!' - அவசரத்துக்கு அல்லாடும் மாணவர்கள்... திருவாரூர் அவலம்!

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி ஒன்றியம், சவளக்காரன் பகுதியில் அமைந்துள்ளது ஆதிதிராவிடர் தொடக்கப்பள்ளி. 1954 ல் தொடங்கப்பட்ட இப்பள்ளியில் 29 மாணவர்களும் 33 மாணவிகளும் படித்து வருகின்றனர். இதில் பெரும... மேலும் பார்க்க

திருப்பத்தூர்: கட்டிமுடிக்கப்பட்டும் திறக்கப்படாத நியாயவிலைக் கட்டடம்; சிரமப்படும் மக்கள்!

திருப்பத்தூர் மாவட்டத்தில் மாடப்பள்ளி ஊராட்சியில் கடந்த 2021 ஆம் ஆண்டு அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூபாய் 8.59 லட்சம் மதிப்பீட்டில் புதிய நியாய விலை கட்டடம் கட்டி முடிக்கப்பட்டது. இந்த நியாயவில... மேலும் பார்க்க

செஞ்சி பேருந்து நிலையக் கழிவறையில் கட்டண வசூல்; சுட்டிக்காட்டிய விகடன் -நடவடிக்கை எடுத்த அதிகாரிகள்!

செஞ்சி பேரூராட்சியில் புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டு ஒரு வருட காலமான நிலையில், பொது கழிவறை இல்லாமல் மக்கள் அவதிப்பட்டு வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்த வண்ணம் இருந்தது. இதனால் அலுவலக பணியாளர்கள், ... மேலும் பார்க்க

`விஜய் ஒன்றிய அரசு அனுமதியுடன் பள்ளி நடத்துகிறார்; அண்ணாமலைக்கு சவால் விடுகிறேன்' - உதயநிதி காட்டம்!

'மும்மொழிக் கொள்கையை ஏற்றால்தான் நிதி தருவோம்' என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியது தமிழ்நாட்டில் பெரும் விவாவதப் பொருளாகியிருக்கிறது.இதையடுத்து இந்தித் திணிப்புக்கு எதிராகவும்... மேலும் பார்க்க

"தமிழ்நாட்டுக்கான 2,152 கோடி ரூபாய் நிதியை விடுவிக்க வேண்டும்!" - மோடிக்கு ஸ்டாலின் வேண்டுகோள்

மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், 'தமிழ்நாடு அரசு புதிய கல்விக் கொள்கையை ஏற்க மறுக்கிறது. மும்மொழிக் கொள்கையை ஏற்றால்தான் நிதி தருவோம்' என்று பேசியது சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.மத்தி... மேலும் பார்க்க

``லோகோ பைலட் இளநீர், ஹோமியோபதி மருந்துகளைத் தவிர்க்க வேண்டும்" - அதிகாரி அறிவிப்பால் சர்ச்சை!

இந்திய ரயில்வேயின் லோகோ பைலட்டுகள் பணிக்கு வரும்போது ப்ரீதலைசர்கள் மிஷின் மூலம் சோதிக்கப்படுவார்கள். அதனடிப்படையில், கேரள மாநிலத்தின் திருவனந்தபுரம் பிரிவின் லோகோ பைலட்டுகள் சோதிக்கப்பட்டனர். அப்போது,... மேலும் பார்க்க