கிருஷ்ணகிரி அருகே பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடா்புடையவரை துப்பாக்கியால் சுட்டு...
``லோகோ பைலட் இளநீர், ஹோமியோபதி மருந்துகளைத் தவிர்க்க வேண்டும்" - அதிகாரி அறிவிப்பால் சர்ச்சை!
இந்திய ரயில்வேயின் லோகோ பைலட்டுகள் பணிக்கு வரும்போது ப்ரீதலைசர்கள் மிஷின் மூலம் சோதிக்கப்படுவார்கள். அதனடிப்படையில், கேரள மாநிலத்தின் திருவனந்தபுரம் பிரிவின் லோகோ பைலட்டுகள் சோதிக்கப்பட்டனர். அப்போது, அவர்கள் மது அருந்தியிருந்ததாக அந்த மிஷின் சுட்டிக்காட்டியது. அதைத் தொடர்ந்து, குற்றச்சாட்டை சந்தித்த ஊழியர்களின் இரத்த மாதிரி எடுக்கப்பட்டு, பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. அதன் முடிவில் 'அவர்களின் ரத்தத்தில் ஆல்கஹால் இல்லை' என்பது தெளிவாகி முடிவுகள் அறிவிக்கப்பட்டது.

இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில், திருவனந்தபுரம் பிரிவின் மூத்த பொறியியலாளர் ஒரு சுற்றறிக்கையை பணியாளர்களுக்கு அனுப்பியிருக்கிறார். அதில், பணியில் இருக்கும்போது, இளநீர், ஹோமியோபதி மருந்துகள், வாழைப்பழம், இருமல் சிரப்கள், குளிர்பானங்கள் போன்றவைகளை உட்கொள்ளக்கூடாது. ஒரு லோகோ பைலட் தடைசெய்யப்பட்ட பொருள்களில் ஏதேனும் ஒன்றை உட்கொள்ள விரும்பினால், அவர்கள் டிப்போவில் உள்ள க்ரூ கன்ட்ரோலருக்கு (CRC) எழுத்துப்பூர்வமாகத் தெரிவிக்க வேண்டும்.
ஆல்கஹால் கொண்ட மருந்தையும் ரயில்வே மருத்துவ அதிகாரியின் எழுத்துப்பூர்வ ஒப்புதல் பெற்ற பின்னரே பயன்படுத்த முடியும்" என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு ரயில்வே ஊழியர்களும், லோகோ பைலட்டுகளின் சங்கங்களும் கடும் கண்டனங்களை தெரிவித்துவருகின்றனர். இது தொடர்பாக ரயில்வே ஊழியர்கள் சங்கம், ``எங்களை சோதிக்கும் ப்ரீத்லைசர் மிஷின் ரிப்பேராக இருப்பது, ஆல்கஹால் சோதனை முடிவுகளில் தெரியவந்திருக்கிறது. அப்படியானால் அந்த மிஷினை மாற்றும் முடிவைதான் ரயில்வே அதிகாரி எடுத்திருக்க வேண்டும். ஆனால், எங்களில் உணவு, மருந்து விஷங்களில் கடுமை காண்பிப்பது முறையல்ல" எனக் குறிப்பிடுகின்றனர்.