கிருஷ்ணகிரி அருகே பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடா்புடையவரை துப்பாக்கியால் சுட்டு...
"தமிழ்நாட்டுக்கான 2,152 கோடி ரூபாய் நிதியை விடுவிக்க வேண்டும்!" - மோடிக்கு ஸ்டாலின் வேண்டுகோள்
மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், 'தமிழ்நாடு அரசு புதிய கல்விக் கொள்கையை ஏற்க மறுக்கிறது. மும்மொழிக் கொள்கையை ஏற்றால்தான் நிதி தருவோம்' என்று பேசியது சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.
மத்திய அரசின் இந்த இந்தித் திணிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக தமிழ்நாட்டில் பெரும் எதிர்ப்பு அலை கிளம்பியிருக்கிறது. அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் மும்மொழிக் கொள்கைக்கு எதிராகத் தங்களது கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அவ்வகையில், மும்மொழிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிப்பு, யுஜிசி புதிய விதி, புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் சென்னையில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணிக் கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் (பிப் 18) நடைபெற்றிருந்தது. இதையடுத்து இந்தி திணிப்புக் குறித்து பல்வேறு கருத்துகளும், எதிர்ப்புகளும் கிளம்பின.
இந்நிலையில் மும்மொழிக் கொள்கையை ஏற்காததால், தமிழ்நாட்டுக்கான 2,152 கோடி ரூபாய் நிதியை கொடுக்காமல் இருப்பது நியாயமல்ல என்று பிரதமர் மோடிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின்.
இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள மு.க.ஸ்டாலின், "மாண்புமிகு பிரதமர் மோடி அவர்களே… NEP2020-ஐ முழுமையாக நடைமுறைப்படுத்தி, மும்மொழிக் கொள்கையை ஏற்றால்தான் எங்கள் தமிழ்நாட்டு மாணவர்களுக்கான 'Samagra Shiksha' நிதி ஒதுக்கப்படும் என்பது எவ்விதத்தில் நியாயம்?
மாண்புமிகு பிரதமர் @narendramodi அவர்களே…#NEP2020-ஐ முழுமையாக நடைமுறைப்படுத்தி, மும்மொழிக் கொள்கையை ஏற்றால்தான் எங்கள் தமிழ்நாட்டு மாணவர்களுக்கான #SamagraShiksha நிதி ஒதுக்கப்படும் என்பது எவ்விதத்தில் நியாயம்?
— M.K.Stalin (@mkstalin) February 20, 2025
தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பில்லையா?
இருவேறு… pic.twitter.com/k1pwb9T6dT
தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பில்லையா? இருவேறு திட்டங்களுக்கு முடிச்சுப் போட்டு கல்விக்கான நிதியை முடக்குவது அறமா? இந்தப் பிரச்சினையின் தீவிரத்தை உணர்ந்து தாங்கள் உடனடியாகத் தலையிட்டு, தமிழ்நாட்டுக்கான 2,152 கோடி ரூபாய் நிதியை விடுவிக்க வேண்டும்" என்று கூறியிருக்கிறார்.