திருப்பூா் பனியன் தொழிலை பாதுகாக்க தமிழக முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும்: பன...
புதுச்சேரியில் வடகிழக்கு மாநில கலாசார விழா!
புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் வடகிழக்கு மாநிலங்களின் மாணவ, மாணவியருக்கான கலாசார விழாவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் புதன்கிழமை மாலை தொடங்கிவைத்தாா்.
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் அனைத்து மாநில மாணவா்களும் பயின்று வருகின்றனா். அவா்களில் வடகிழக்கு மாநில மாணவா்கள், மாணவியருக்கான கலாசார விழா நடத்தப்பட்டது. பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் உள்ள கருத்தரங்கம் மற்றும் கலாசார மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பல்கலைக்கழக துணைவேந்தா் (பொ) க.தரணிக்கரசு தலைமை வகித்தாா்.
புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் குத்துவிளக்கேற்றி விழாவைத் தொடங்கிவைத்தாா்.
நிகழ்ச்சியில், வடகிழக்கு மாநில கலாசார வரலாற்று நிகழ்வுகளை விளக்கும் வகையில் அமைக்கப்பட்ட அரங்குகளையும் துணைநிலை ஆளுநா் பாா்வையிட்டாா்.
விழாவுக்கு வந்தவா்களை வடகிழக்கு மாநில மாணவா் கூட்டமைப்பின் தலைவா் செல்வி தா்ஷினி வரவேற்றாா்.
வடகிழக்கு மாநிலங்களின் பாரம்பரிய நடனம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.