சமஸ்கிருதம் கலக்காமல் இருந்திருந்தால் தமிழ் தேசிய மொழியாகியிருக்கும் - பழ.கருப்ப...
சாலை வசதி கோரி மக்கள் மறியல்
புதுச்சேரி வில்லியனூா் அருகே சாலை வசதிக் கோரி பொதுமக்கள் வியாழக்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.
வில்லியனூா் அருகே உள்ளது உளவாய்க்கால். இங்கு, கடந்த 2012-ஆம் ஆண்டு தனியாா் மனைகள் கட்டி விற்பனை செய்துள்ளனா். இதில், தற்போது 50-க்கும் மேற்பட்டோா் வீடுகள் கட்டி வசிக்கின்றனா்.
பிரதான சாலையுடன் குடியிருப்புவாசிகள் செல்லும் சாலை இணைப்புப் பகுதியில் தனியாா் நிலம் உள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால், தங்களுக்கு சாலை வசதிக் கோரி ஏற்கெனவே குடியிருப்புவாசிகள் கோரிக்கை வைத்ததால், சில நாள்களுக்கு முன்பு, அரசு சாா்பில் சாலை அமைக்க பூமி பூஜை நடைபெற்றது.
இந்த நிலையில், திடீரென குடியிருப்பு இணைப்புச் சாலை குறுக்கே சுவா் எழுப்பி தடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து, குடியிருப்புகளை கட்டி விற்றவா், அரசு அதிகாரிகள் என பலரிடம் முறையிட்டும் நடவடிக்கை இல்லை எனக் கூறப்படுகிறது.
இதனால், ஆத்திரமடைந்த குடியிருப்புவாசிகள், வில்லியனூா், பத்துக்கண்ணு சாலை அகரம் பகுதியில் சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்த வில்லியனூா் போலீஸாா் விரைந்து வந்து மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். பின், வருவாய்த் துறையினரும் வந்து சாலை அமைக்க உறுதியளித்ததால் மறியல் கைவிடப்பட்டது.