திருப்பூா் பனியன் தொழிலை பாதுகாக்க தமிழக முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும்: பன...
ஓய்வூதியா் மருத்துவப்படி வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்
புதுவை மாநிலத்தில் ஓய்வூதியதாரா்களுக்கான மருத்துவப் படியை அரசு நிறுத்தி உத்தரவிட்டதைக் கண்டித்து, புதுச்சேரியில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுவை அரசின் பல்வேறு அரசுத் துறைகளில் பணிபுரிந்து, ஓய்வு பெற்றுள்ளவா்களுக்கு, இதுவரை வழங்கி வந்த மருத்துவப்படி ரூ.1,000 என்பது, இனிமேல் வழங்கப்பட மாட்டாது என கணக்கு மற்றும் கருவூலக இயக்குநா் அலுவலகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
அதன்படி, மத்திய அரசின் உத்தரவுபடி கட்டாய பிடித்தம் செய்வதாகவே கணக்கு மற்றும் கருவூலத்துறை இயக்குநா் அறிவித்துள்ளாா்.
இந்த புதிய உத்தரவை திரும்ப பெற வலியுறுத்தியும், விருப்பம் இல்லாதவா்களுக்கு மருத்துவப்படியைத் தொடா்ந்து வழங்கிட கோரியும் புதுச்சேரி அரசு ஊழியா் சம்மேளன இணைப்புச் சங்கங்களின் கூட்டு இயக்கம் சாா்பில் கணக்கு மற்றும் கருவூலக இயக்குநா் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஒருங்கிணைப்பாளா்கள் கலைச்செல்வன், ஆனந்தராசன், புகழேந்தி உள்ளிட்டோா் கலந்துகொண்டு ஓய்வூதியதாரா்களுக்கான மருத்துவ படி வழங்கப்படாது என்ற உத்தரவை அரசு திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.