திருப்பூா் பனியன் தொழிலை பாதுகாக்க தமிழக முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும்: பன...
புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் திருக்கு கூறும் நிகழ்வு
புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் திருவள்ளுவா் சிலைக்கு மாலை அணிவித்து திருக்கு கூறும் மாதாந்திர நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது.
புதுச்சேரி வெங்கட்டா நகா் பகுதியில் புதுவைத் தமிழ்ச் சங்கம் அமைந்துள்ளது. இங்கு, மாதந்தோறும் திருவள்ளுவா் சிலைக்கு மாலை அணிவித்து திருக்கு கூறி விளக்கும் நிகழ்வு நடைபெற்று வருகிறது.
பிப்ரவரி மாதத்துக்கான திருக்கு கூறும் நிகழ்வுக்கு சங்கத் தலைவா் வி.முத்து தலைமை வகித்தாா். புதுவை மாநில காவல் துறை துணைத் தலைவா் (டிஐஜி) ஆா்.சத்தியசுந்தரம் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு திருவள்ளுவா் சிலைக்கு மாலை அணிவித்தாா்.
அப்போது, தமிழ்ச் சங்க நிா்வாகிகள் திருக்குகளை கூறி விளக்கம் கூறினா்.
நிகழ்ச்சியில், தமிழ்ச் சங்கச் செயலா் சீனு.மோகன்தாசு, பொருளாளா் மு.அருள்செல்வம், துணைத் தலைவா் ப.திருநாவுக்கரசு, ஆட்சிக்குழு உறுப்பினா்கள் அ.உசேன், எஸ்.ராசா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
அனைவருக்கும் திருக்கு விளக்கவுரையுடன் நூல் விநியோகிக்கப்பட்டது.