Chiranjeevi: 'பேத்தி வேண்டாம்; ஹாஸ்டல் மாதிரி இருக்கு' - சர்ச்சையைக் கிளப்பிய சிரஞ்சீவி பேச்சு
நடிகர் சிரஞ்சீவி பெண் குழந்தைகள் குறித்து பேசிய கருத்து சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது.
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக திகழ்பவர் நடிகர் சிரஞ்சீவி. தெலுங்கு மட்டுமின்றி கன்னடம், இந்தி போன்ற மொழிகளிலும் நடித்திருக்கிறார். தனது நடிப்பிற்காக பத்ம பூஷன் உள்ளிட்ட பல விருதுகளை வென்றிருக்கிறார். சிரஞ்சீவி போல அவரது மகன் ராம் சரணும் முன்னனி நடிகராக வலம் வருகிறார்.
![சிரஞ்சீவி](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-12/ehlwisko/52241_thumb.jpg)
இந்நிலையில் சிரஞ்சீவி ‘பிரம்ம ஆனந்தம்’ என்ற படத்தின் செய்தியாளர் சந்திப்பில் பெண் குழந்தைகள் குறித்து பேசியது சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது. அதாவது “ நான் வீட்டில் இருக்கும்போது பேத்திகளுடன் இருப்பதுபோல இருக்காது. பெண்கள் விடுதியில் இருக்கும் வார்டனைப்போல தான் இருக்கும். என்னைச் சுற்றி லேடீஸ் மட்டும்தான் இருப்பார்கள்.
அதனால் ராம் சரணிடம் இந்த முறையாவது ஒரு ஆண் குழந்தையைப் பெற்று தரும்படி கேட்டிருக்கிறேன். நமது மரபை தொடர வழிசெய் என்று வாழ்த்துகிறேன். ஆனால் அவருக்கோ அவர் மகள்தான் எல்லாமே. அதனால் அவர் மீண்டும் பெண் குழந்தையைப் பெற்றெடுப்பாரோ என்று பயமாக இருக்கிறது” என்று தெரிவித்திருக்கிறார்.
![மனைவி குழந்தையுடன் ராம் சரண்](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-12/our0lit4/chiranjeevi-reveals-ram-charan-and-upasanas-baby-girls-name.jpg)
ஆண் குழந்தைகளை உயர்த்தியும், பெண் குழந்தைகளை தாழ்த்தியும் பேசியிருக்கிறார் என்று சிரஞ்சீவிக்கு சமூக வலைதளங்களில் எதிர்ப்புகள் கிளம்பி இருக்கிறது.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...