Gaza மக்களை வெளியேற்ற விடமாட்டோம் - Trumpக்கு எதிராக திரண்ட Arab States | Decode
தீக்ஷனா அசத்தல் பந்துவீச்சு..! 49 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை வெற்றி!
ஆஸி. உடனான முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 46 ஓவர்கள் முடிவில் 214 ரன்கள் மட்டுமே எடுத்தது.
அடுத்து விளையாடிய ஆஸி. 33.5 ஓவர்களில் 165/10 ரன்கள் எடுத்து 49 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது. அதிகபட்சமாக அலெக்ஸ் கேரி 41 ரன்கள் எடுத்தார்.
இலங்கை சார்பில் மகேஷ் தீக்ஷனா 4 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். அசிதா பெர்னாண்டோ, துனித் வெல்லாலகே தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்கள்.
சதமடித்த இலங்கை அணியின் கேப்டன் சரிதா அசலங்கா ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
2 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என இலங்கை அணி முன்னிலை வகிக்கிறது. அடுத்த போட்டி பிப்.14ஆம் தேதி நடைபெறவிருக்கிறது.