செய்திகள் :

சஞ்சு சாம்சனுக்கு அறுவை சிகிச்சை! ஐபிஎல்லில் பங்கேற்பாரா?

post image

சஞ்சு சாம்சனுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதால் 2025 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் பங்கேற்பாரா? என்பது குறித்து சந்தேகம் எழுந்துள்ளது.

இந்திய டி20 அணியின் விக்கெட் கீப்பரும் ராஜஸ்தான் அணியின் கேப்டனுமான சஞ்சு சாம்சனுக்கு கைவிரலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதால் இந்தாண்டுக்கான ஐபிஎல் தொடரில் பங்கேற்பாரா? என்பது குறித்த சந்தேகம் எழுந்துள்ளது. மேலும் சாம்பியன்ஸ் டிராபிக்கான அணியிலும் சஞ்சு சாம்சன் இடம்பெறவில்லை.

இங்கிலாந்துக்கு எதிரான 5 வது டி20 போட்டியின்போது இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் வீசிய பந்து சஞ்சு சாம்சனின் வலது ஆள்காட்டி விரலில் பலமாகத் தாக்கியது. இதனால், வெளியேறிய சாம்சனுக்குப் பதிலாக துருவ் ஜுரேல் விக்கெட் கீப்பிங் பணியை கவனித்தார்.

அறுவை சிகிச்சைக்குப் பிறகு சாம்சன் குணமடைய ஒரு மாதம் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஐபிஎல்லில் பங்கேற்க சரியான நேரத்தில் அவர் உடல் தகுதி பெறுவார் என்று அனைவரும் எதிர்பார்த்துள்ளனர்.

அதிவேக 16,000 ரன்கள்..! சச்சினின் சாதனையை முறியடித்த கோலி!

ஐபிஎல் போட்டிகள் வருகிற மார்ச் 21 ஆம் தேதி தொடங்கும் என்று முதல் கட்ட தகவல்கள் வெளியாகியிருக்கும் நிலையில், அவரின் காயம் இன்னும் 5 வாரங்களில் குணமடையுமா? என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

கேரள அணிக்காகவும் விளையாடிவரும் சஞ்சு சாம்சன் இந்தக் காயத்தால் ரஞ்சி தொடரின் காலிறுதிப் போட்டியில் ஜம்மு-காஷ்மீருக்கு எதிரான போட்டியிலும் விளையாட முடியாமல் போனது.

மார்ச் 23 ஆம் தேதி தொடங்கும் ஐபிஎல் போட்டியில் சஞ்சு சாம்சன் விளையாடுவார் என்று பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும், மும்பையில் நடந்த சிறப்புப் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட சுக்லா, செய்தியாளர்களிடம் பேசுகையில் ஐபிஎல் தேதியையும் வெளியிட்டார். இருப்பினும், சஞ்சு சாம்சனின் காயம் குறித்து பிசிசிஐ எந்தத் தகவல்களையும் அதிகாரபூர்வமாக வெளியிடவில்லை.

சமனில் முடிந்தும் அரையிறுதிக்கு முன்னேறிய கேரளா..! எப்படி சாத்தியம்?

இந்தியா 3-0*..! கடைசி ஒருநாள் போட்டியிலும் மண்ணைக் கவ்விய இங்கிலாந்து!

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை முழுமையாக வென்று அசத்தியுள்ளது.இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் மூன... மேலும் பார்க்க

விராட் கோலியை அதிக முறை வீழ்த்திய ஆதில் ரஷித்!

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விராட் கோலியை அதிக முறை வீழ்த்தியவராக ஆதில் ரஷித் முன்னேறியுள்ளார்.முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியைத் தழுவிய இங்கிலாந்து அணி தொடரையும் இழந்தது. 3-ஆவது போட்டியில் அதிரடி... மேலும் பார்க்க

மூவர் அரைசதம்..! இறுதிக்குச் செல்லுமா தென்னாப்பிரிக்கா? பாகிஸ்தானுக்கு 353 ரன்கள் இலக்கு!

முத்தரப்பு ஒருநாள் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 353 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது.பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து அணிகள் மோதும் முத்தரப்பு ஒருநாள் தொடர் பாக... மேலும் பார்க்க

அதிவேக 16,000 ரன்கள்..! சச்சினின் சாதனையை முறியடித்த கோலி!

அதிவேகமாக 16,000 ரன்கள் குவித்து விராட் கோலி புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளார். இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரண்ட... மேலும் பார்க்க

சமனில் முடிந்தும் அரையிறுதிக்கு முன்னேறிய கேரளா..! எப்படி சாத்தியம்?

ரஞ்சி கோப்பை காலிறுதியில் விளையாடிய கேரள, ஜம்மு -காஷ்மீர் அணிகள் போட்டி சமனில் முடிவடைந்தது. இருப்பினும் கேரள அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. ரஞ்சி கோப்பை போட்டிகள் அக்.11ஆம் தேதி முதல் நடைபெற்று... மேலும் பார்க்க

தீக்‌ஷனா அசத்தல் பந்துவீச்சு..! 49 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை வெற்றி!

ஆஸி. உடனான முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 46 ஓவர்கள் முடிவில் 214 ரன்கள் மட்டுமே எடுத்தது.அடுத்து விளையாடிய ஆஸி. 33.5 ஓ... மேலும் பார்க்க