Darshan: ``என்னை நேரில் சந்திப்பதைத் தவிருங்கள்..." - ரசிகர்களிடம் நடிகர் தர்ஷன் வேண்டுகோள்!
பிரபல கன்னட நடிகர் தர்ஷன், அவரின் ரசிகர் ரேணுகாசாமி என்பவரைக் கொலை செய்தக் குற்றச்சாட்டில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்டார். அவருடன் அவரின் காதலி நடிகை பவித்ராவும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில், கடந்த டிசம்பர் மாதம் நடிகர் தர்ஷனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. இந்த நிலையில், நடிகர் தர்ஷன் தன் சமூகவலைதளப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
அதில், ``எனது ரசிகர்கள்களின் அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். நான் என்ன சொன்னாலும் அது போதாது. நீங்கள் என் மீது அவ்வளவு அன்பை பொழிந்திருக்கிறீர்கள். அதை எப்படி திருப்பித் தருவது என்று எனக்குத் தெரியவில்லை.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-10/ognalhbr/darshan.png)
எனது உடல்நலனில் சற்று தளர்வு தெரிகிறது. முதுகுத் தண்டு பிரச்னைகள் பற்றி உங்களுக்குத் தெரியும். நீண்ட நேரம் என்னால் நிற்க முடியவில்லை. மருத்துவர்களின் பரிந்துரையின் அடிப்படையில் 15-20 நாள்களுக்கு ஒரு ஊசி போட்டுக்கொள்கிறேன். அப்போது மட்டும் வலி குறைகிறது. பிறகு மீண்டும் வலிக்கிறது. அதனால் எனக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்தவர்கள் தெரிவித்திருக்கின்றனர். எனவே, பிப்ரவரி 16-ம் தேதி என் பிறந்தநாளுக்கு ரசிகர்கள் என்னை நேரில் பார்க்க வருவதை தவிர்க்கும்படி கேட்டுக் கொள்கிறேன். எனக்காகக் காத்திருந்த தயாரிப்பாளர்களுக்கு நன்றி" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.