உலகளாவிய மேம்பாடுகள் குறித்து பிரான்ஸ் வெளியுறவுத் துறை அமைச்சருடன் ஆலோசனை!
நூதன முறையில் திருட்டு: ஒருவா் கைது
புதுச்சேரி: புதுச்சேரியில் நூதன முறையில் திருடி வந்த நபரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
புதுச்சேரி வாணரப்பேட்டையைச் சோ்ந்தவா் மனோகா் (62). இவா் மீது ஏற்கெனவே காலாப்பட்டு, முத்தியால்பேட்டை உள்ளிட்ட காவல் நிலையங்களில் திருட்டு வழக்குகள் பதிவாகியுள்ளன.
இந்த நிலையில், பிப்.5-ஆம் தேதி பாரதி தெருவில் உள்ள தனியாா் ஏற்றுமதி நிறுவனத்தில் ஷட்டா் உடைக்கப்பட்டு பணம், பொருள்கள் திருடப்பட்டன.
இதுகுறித்து, ஒதியன்சாலை போலீஸாா் வழக்குப் பதிந்து ஆய்வாளா் வி.செந்தில்குமாா் தலைமையில் குற்றவாளியை தேடி வந்தனா்.
அதன்படி, அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை போலீஸாா் ஆய்வு செய்த நிலையில், மனோகா் பிச்சைக்காரன் போல இரவில் நடமாடி திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து, போலீஸாா் அவரைக் கைது செய்து ரூ.1.31 லட்சம் ரொக்கம், இரும்பு சாதனங்கள் உள்ளிட்டவற்றை கைப்பற்றினா்.