தைப்பூசம்: முருகன் கோயில்களில் திரண்ட பக்தர்கள்!
தைப்பூசத் திருவிழாவையொட்டி தமிழகத்தில் உள்ள முருகன் கோயில்களில் இன்று(பிப். 11) அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
தைப்பூசத் திருவிழாவையொட்டி பழனி மலைக் கோயிலுக்கு வரும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பால் காவடி, இளநீர் காவடி, மயில் காவடி எடுத்து வந்த வண்ணம் உள்ளனர்.
அதேபோல், திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூசத் திருவிழாவையொட்டி, ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.
இதையும் படிக்க: 2,642 மருத்துவா் பணியிடங்களுக்கு நாளை சான்றிதழ் சரிபாா்ப்பு
சென்னையில் உள்ள வடபழனி முருகன் கோயிலிலும் அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதி காணப்படுகிறது.
முருகக் கடவுளின் அறுபடை வீடு கோயில்களில் நான்காம் படைவீடான கும்பகோணம் அருகிலுள்ள சுவாமிமலை சுவாமிநாத சுவாமி ஆலயத்திலும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.