`பெரியாரை ஏற்றுக்கொள்ளும் என் தம்பிகள், என்னை விட்டு விலகிச் செல்லலாம்' - சீமான் ஓப்பன் டாக்!
திருச்சி விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,:
“பிரபாகரன் உள்ளிட்ட உலகத்தில் யார் பெரியாரை ஏற்றுக் கொண்டாலும் நான் பெரியாரை ஏற்றுக்கொள்ள மாட்டேன். என்னுடைய தம்பிகளும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். பெரியாரை ஏற்றுக்கொள்ளும் என்னுடைய தம்பிகள் என்னை விட்டு விலகிச் செல்லலாம். ஈரோடு இடைத்தேர்தலில் பா.ஜ.க வாக்குகள் அனைத்தும் நாம் தமிழர் கட்சிக்கு கிடைத்தது எனக் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாதது.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-11/pcai4cq4/seeman.jpg)
நாங்கள் வாங்கிய அனைத்து வாக்குகளும் நாம் தமிழர் கட்சிக்காக மக்கள் அளித்த வாக்குகள். ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என எல்லா கட்சிகளுமே தேர்தல்களில் வைப்புத் தொகையை இழந்துள்ளார்கள். அந்த வரலாறு தமிழகத்தில் நடந்துள்ளது. பெரியார் குறித்த எனது கருத்து கொஞ்சம் ஓவராக போய்விட்டதாக அண்ணாமலை கூறிய கருத்து பற்றி கேட்கிறீர்கள். இப்பொழுது தான் தொடங்கியுள்ளேன். இன்னும் போகப்போக நிறைய உள்ளது” என்றார்.