அகத்தியா டிரைலர்!
நடிகர்கள் ஜீவா, அர்ஜுன் நடிப்பில் உருவாகும் அகத்தியா திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
பாடலாசிரியர் பா. விஜய் இயக்கத்தில் நடிகர்கள் ஜீவா மற்றும் அர்ஜுன் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் படத்திற்கு அகத்தியா எனப் பெயரிட்டுள்ளனர்.
படத்தின் நாயகியாக ராஷி கன்னா நடிக்கிறார். வேல்ஸ் இண்டர்னேஷனல் தயாரிக்கும் இப்படத்தின் அறிவிப்பு போஸ்டரை பார்த்தால் இது சரித்திர காலப் பேய்க்கதையாக இருக்கும் எனக் கூறப்பட்டது.
இந்தப் படம் வரும் பிப்.28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.
இந்தப் படத்தில் யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி நடித்துள்ளதால் நகைச்சுவை காட்சிகளுக்கு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
கடைசியாக ஜீவா நடித்த பிளாக் திரைப்படம் வெற்றி பெற்றது. இயக்குநர் பா.விஜய் கடைசியாக ஆருத்ரா (2018) படத்தினை இயக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.