சென்னை: 3 நாள்களுக்கு சிறப்பு பேருந்துகள்!
தமிழகத்தில் இந்த வார இறுதியை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
தமிழகத்தில் வார இறுதி நாள்களை முன்னிட்டு, சென்னையில் வெள்ளிக்கிழமை முதல் 3 நாள்களுக்கு சென்னையிலிருந்து மதுரை, திருச்சி, திருநெல்வேலி, திருவண்ணாமலை, நாகர்கோவில், தூத்துக்குடி, கும்பகோணத்துக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக மாநகரப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
வார இறுதி நாள்களில், பிப்ரவரி 14 ஆம் தேதியில் கிளாம்பாக்கத்தில் இருந்து 245 பேருந்துகளும், கோயம்பேட்டில் இருந்து 51 பேருந்துகளும், மாதவரத்தில் இருந்து 20 பேருந்துகளும் இயக்கப்படும்.
தொடர்ந்து, இரண்டாவது நாளில் (பிப். 15) கிளாம்பக்கத்தில் இருந்து 240 பேருந்துகளும், கோயம்பேட்டில் இருந்து 51 பேருந்துகளும், மாதவரத்தில் இருந்து 20 பேருந்துகளும் இயக்கப்படவுள்ளது.
இதையும் படிக்க: தஞ்சாவூரில் பள்ளி மாணவி மயங்கி விழுந்து உயிரிழப்பு: ரூ. 5 லட்சம் நிதியுதவி!