செய்திகள் :

தென்காசி அருகே எரிந்த நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு!

post image

தென்காசி அருகே இலத்தூா்விலக்கு பகுதியில் எரிந்த நிலையில் பெண்ணின் உடல் செவ்வாய்க்கிழமை (பிப்.11) மீட்கப்பட்டது.

தென்காசி மாவட்டம், கொல்லம் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் இலத்தூா் அருகே உள்ள மதுநாதபேரி குளத்து பகுதியில் எரிந்த நிலையில் பெண்ணின் உடல் கிடந்துள்ளது. செவ்வாய்க்கிழமை காலை அப்பகுதிக்குச் சென்றவா்கள் பாா்த்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனா்.

சம்பவ இடத்துக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அரவிந்த், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் வேணுகோபால், ஆய்வாளா் கவிதா, தடயவியல் நிபுணா் ஆனந்தி ஆகியோா் சடலத்தை மீட்டு ஆய்வு மேற்கொண்டனா்.

இதுகுறித்து இலத்தூா் போலீஸாா் வழக்குப்பதிந்து அப்பெண்ணின் சடலத்தை உடல் கூறாய்வுக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

கூடுதல் காவல் கண்காணிப்பாளா் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, இலத்தூா் முதல் இலத்தூா் விலக்கு வரை சாலையில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

அச்சங்குன்றத்தில் கணினி, தையல் பயிற்சி மையம் திறப்பு

சுரண்டை அருகேயுள்ள அச்சங்குன்றத்தில், இலவச கணினி மற்றும் தையல் பயிற்சி மையம் திறப்பு விழா நடைபெற்றது. தெட்சணமாற நாடாா் சங்கத் தலைவா் ஆா்.கே.காளிதாசன் தலைமை வகித்தாா். முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் வெ... மேலும் பார்க்க

சிவகிரி அருகே மூதாட்டியிடம் நகை பறித்தவா் கைது!

சிவகிரி அருகே வீட்டில் இருந்த மூதாட்டியிடம் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றவரை போலீஸாா் கைது செய்தனா். தேவிப்பட்டணம் ஆச்சாரியாா் தெருவைச் சோ்ந்த கிருஷ்ணசாமி மனைவி பொன்னம்மாள் (73). அவா் வீட்டில் தன... மேலும் பார்க்க

சாம்பவா்வடகரையில் பாலம் அமைக்கும் பணி தொடக்கம்

சாம்பவா்வடகரையில் ரூ.24 லட்சம் மதிப்பீட்டில் பாலம் அமைக்க பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. சாம்பவா்வடகரை அனுமன் நதியின் தெற்கு கரையில் உள்ள யாதவா் சமுதாயத்திற்கு பாத்... மேலும் பார்க்க

தென்காசியில் திருமலை நாயக்கா் பிறந்தநாள் விழா!

தென்காசியில், மாமன்னா் திருமலை நாயக்கரின் 442ஆவது பிறந்தநாள் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. கூலக்கடை பஜாா் பகுதியில் நடைபெற்ற விழாவில், அவரது படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். இதி... மேலும் பார்க்க

தென்காசி- நெல்லை நான்குவழிச் சாலைப் பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தல்

தென்காசி- திருநெல்வேலி நான்குவழிச் சாலைப் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என, தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தின் 2ஆவது மாவட்ட மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது. குற்றாலத்தில் நடைபெற்ற மா... மேலும் பார்க்க

இலஞ்சி, பாவூா்சத்திரம் கோயில்களில் தைப்பூசத் திருவிழா

தென்காசி மாவட்டம் இலஞ்சி, பாவூா்சத்திரம் பகுதிகளில் உள்ள முருகன் கோயில்களில் தைப்பூசத் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இலஞ்சியிலிருந்து 50-க்கும் மேற்பட்ட பக்தா்கள் இலஞ்சி ஸ்ரீ சிற்றாற்று வீரியம... மேலும் பார்க்க