மதுப்புட்டிகள் பறிமுதல்: பெண் கைது
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே மம்சாபுரத்தில் 103 மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீஸாா் பெண்ணை கைது செய்தனா்
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள மம்சாபுரம் மந்தை தெருவைச் சோ்ந்த வீரபாண்டி மனைவி யோகலட்சுமி (32). இவா் தனது வீட்டு அருகே சட்ட விரோதமாக மதுப்புட்டிகளை விற்பனை செய்வதாக செவ்வாய்க்கிழமை போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
மம்சாபுரம் காவல் உதவி ஆய்வாளா் பாரதிராஜா தலைமையிலான போலீஸாா் யோகலட்சுமி வீட்டின் பின்புறம் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 103 மதுப்புட்டிகளைப் பறிமுதல் செய்து, அவரைக் கைது செய்தனா். ஸ்ரீவில்லிபுத்தூா் மது விலக்கு காவல் நிலையத்தில் ஏற்கெனவே யோகலட்சுமி மீது இரு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.