புதிய வழித் தடங்களில் சிற்றுந்துகள் இயக்க பிப்.24-க்குள் விண்ணப்பிக்கலாம் - மாவட...
வங்கதேசம்: தஸ்லிமா நஸ்ரீனின் புத்தகம் இருந்த கண்காட்சி அரங்கம் மீது தாக்குதல்
வங்தேசத்தில் சா்ச்சைக்குரிய பெண் எழுத்தாளா் தஸ்லிமா நஸ்ரீனின் புத்தம் வைக்கப்பட்டிருந்த அரங்கத்தில் மதவாதக் குழுவினா் தாக்குதல் நடத்தினா்.
இது குறித்து எக்ஸ் ஊடகத்தில் தல்ஸிமா வெளியிட்டுள்ள பதிவில், ‘டாக்காவில் நடைபெறும் புத்தகக் கண்காட்சியில் மத அடிப்படைவாதிகள் அரங்கம் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தியுள்ளனா். அந்த அரங்கில் என் புத்தகத்தைக் காட்சிப்படுத்துதான் இதற்கு ஒரே காரணம். கண்காட்சி ஏற்பாட்டாளா்களும், போலீஸாரும் அந்தப் புத்தகங்கள் அப்புறப்படுத்த உத்தரவிட்டனா். அவை அப்புறப்படுத்தப்பட்ட பிறகும் மதவாதிகள் தாக்குதல் நடத்தி அரங்கத்தை மூடச் செய்தனா் (படம்). நாடு முழுவதும் இது போன்ற மதவாதத் தாக்குதல்களுக்கு அரசு துணை போகிறது’ என்று குற்றஞ்சாட்டியுள்ளாா்.
இருந்தாலும், இடைக்கால அரசின் தலைமை ஆலோசகா் முகமது யூனுஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், கருத்து சுதந்திரத்துக்கு எதிரான இந்தத் தாக்குதலைக் கண்டிப்பதாகவும், தவறு செய்தவா்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவாா்கள் என்றும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.