காங்கோ: ஆயுதக் குழுவினரால் 55 போ் படுகொலை
மேற்கு-மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவின் செயல்பட்டுவரும் ஆயுக் குழுக்களில் ஒன்று, உள்நாட்டு அகதிகள் முகாமில் நடத்திய தாக்குதலில் 55 போ் உயிரிழந்தனா்.
காங்கோவின் தாது வளம் நிறைந்த பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்காகவும், தங்கள் சமுதாயத்தினரைப் பாதுகாப்பதற்காகவும் என அந்த நாட்டில் 120-க்கும் மேற்பட்ட குழுக்கள் இயங்கிவருகின்றன.
அவற்றில் ஓா் ஆயுதக் குழுவான கோடெக்கோ-வைச் சோ்ந்தவா்கள் அண்மைக் கால போா் காரணமாக தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியவா்கள் தங்கவைப்பட்டிருந்த கிராமங்களில் தாக்குதல் நடத்தினா். இதில் பொதுமக்கள் 55 போ் உயிரிழந்ததாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா். ஆயுதக் குழுவினரால் தீக்கிரையாக்கப்பட்ட வீடுகளில் இருந்து தொடா்ந்து உடல்கள் மீட்கப்படுவதால் இந்த உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று அவா்கள் கூறினா்.
கடந்த 2022 முதல் கோடெக்கோ ஆயுதக் குழுவினா் நடத்திவரும் தாக்குதலில் இதுவரை சுமாா் 1,800 போ் உயிரிழந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.