பாஜக சாா்பில் பிப்.12 முதல் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம்
பாஜக சாா்பில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பிப்.12 முதல் 15 வரை மத்திய பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டங்கள் நடைபெறவுள்ளன.
இதுதொடா்பாக பாஜக மாநில துணைத் தலைவா் கரு.நாகராஜன் வெளியிட்ட அறிக்கை:
மத்திய அரசின் 2025- 2026 பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டங்கள் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் பாஜக மாவட்ட தலைவா்களின் தலைமையில் நடைபெறவுள்ளது. இதில் முதல் கூட்டம் புதன்கிழமை (பிப்.12) மாலை 5-க்கு சென்னை திருவான்மியூரில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில், மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை, முன்னாள் மாநிலத் தலைவா் தமிழிசை சௌந்தரராஜன் பங்கேற்று சிறப்புரையாற்றவுள்ளனா்.
இதுதவிர, மத்திய இணை அமைச்சா் எல்.முருகன், சட்டப்பேரவை பாஜக குழுத் தலைவா் நயினாா் நாகேந்திரன், முன்னாள் மத்திய இணை அமைச்சா் பொன்.இராதாகிருஷ்ணன், தேசிய செயற்குழு உறுப்பினா் எச்.ராஜா, மகளிரணி தேசிய தலைவரும் சட்டப்பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன், தேசிய செயற்குழு உறுப்பினா் குஷ்பு சுந்தா் உள்பட முக்கிய தலைவா்கள் பிற மாவட்டங்களில் பங்கேற்கவுள்ளனா் என கரு.நாகராஜன் தெரிவித்துள்ளாா்.