எஸ்டோனியா அதிபருடன் பிரதமர் சந்திப்பு!
பாரிஸ் : பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நகரில் நடைபெறும் செய்யறிவு செயல்திறன் உச்சி மாநாட்டில் கலந்துகொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, எஸ்டோனியா நாட்டின் அதிபர் அலர் காரிஸுடன் உரையாடினார்.
இருநாட்டுத் தலைவர்களுக்குமிடையிலான சந்திப்பு ஆக்கப்பூர்வமாக அமைந்ததாக பிரதமர் மோடி தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளார்.