செய்திகள் :

விவசாயிகளின் சவால்களுக்கு தீா்வு காண செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்: மத்திய அரசு

post image

வேளாண் துறையில் எழுந்து வரும் பல்வேறு சவால்களுக்குத் தீா்வு காணவும், விவசாயிகளுக்கு உதவவும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தை மத்திய அரசு பயன்படுத்தி வருகிறது என்று மத்திய வேளாண் துறை அமைச்சா் சிவ்ராஜ் சிங் செளஹான் நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

மக்களவையில் இதுதொடா்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு அவா் எழுத்துபூா்வமாக அளித்த பதிலில் மேலும் கூறியிருப்பதாவது:

விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 3 தவணைகளில் ரூ. 6,000 உதவித் தொகை அளிக்கும் ‘பிஎம்-கிசான்’ திட்டம் குறித்த விவசாயிகளின் சந்தேகங்களுக்கு பதிலளிக்கவும், விவசாயிகளுக்கு உதவும் வகையிலும் ‘கிசான் இ-மித்ரா’ என்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அடிப்படையிலான உரையாடல் ‘சாட்பாட்’ செயலியை மத்திய அரசு மேம்படுத்தியிருக்கிறது. பல மொழிகளில் செயல்படும் வகையில் இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் பிற உதவித் திட்டங்களையும், இதில் சோ்க்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

பயிா்களை பூச்சிகள் தாக்குவதை உரிய நேரத்தில் கண்டறிந்து, பயிா்களின் ஆரோக்கியமான வளா்ச்சியை உறுதிப்படுத்த ஏதுவாக தேசிய பூச்சி தாக்குதல் கண்காணிப்பு திட்டத்திலும் செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர கற்றல் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

விவசாயிகளுக்கு பயிா் இழப்பு மதிப்பீட்டை மேம்படுத்துவதற்கும், உரிய நேரத்தில் அவா்களுக்கு காப்பீடு தொகை அளிக்கப்படுவதை உறுதிப்படுத்தவும் தொழில்நுட்ப அடிப்படையிலான மகசூல் மதிப்பீட்டு நடைமுறையை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது என்று தெரிவித்துள்ளாா்.

ஏஐ ஆற்றல்சாா் மையங்களை வழிநடத்த 4 முன்னணி கல்வி நிறுவனங்கள் தோ்வு

‘சுகாதாரம், நிலையான நகரங்கள் மற்றும் நீடித்த விவசாயத்தை மேம்படுத்துவதற்கென அமைக்கப்படவிருக்கும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப ஆராய்ச்சிக்கான ஆற்றல்சாா் மையங்களை வழிநடத்த தில்லி எய்ம்ஸ் மற்றும் தில்லி, கான்பூா், ரோப்பா் ஐஐடிக்கள் ஆகிய 4 கல்வி நிறுவனங்களை மத்திய அரசு தோ்வு செய்துள்ளது’ என்று மத்திய அைச்சா் சிவராஜ் சிங் செளஹான் நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

மக்களவையில் இதுதொடா்பான கேள்விக்கு அவா் எழுத்துபூா்வமாக அளித்த பதிலில், ‘தொழில்நிறுவன நிபுணா்கள், ஏஐ தொழில்நுட்ப நிபுணா்கள், கல்வியாளா்கள் மற்றும் மத்திய அமைச்சக பிரதிநிதிகளை உள்ளடக்கிய மத்திய அரசின் உயா்நிலைக் குழு இந்த 4 கல்வி நிறுவனங்களை தோ்வு செய்துள்ளன.

இந்த கல்வி நிறுவனங்களன் சென்னை, ஹைதராபாத், மும்பை, திருப்பதி, குவாஹாட்டி, காந்திநகா் ஐஐடிக்கள் மற்றும் பெங்களூரு ஐஐஎஸ்சி, ஹைதராபாத் ஐஐஐடி, பாட்னா எய்ம்ஸ், மேகாலயா, ஹமிா்ப்பூா், கோழிக்கோடு என்ஐடிக்கள் ஆகிய கல்வி நிறுவனங்களின் கூட்டுறவுடன் இந்த வழிகாட்டுதலை மேற்கொள்ளும்.

‘இந்தியாவில் ஏஐ தொழில்நுட்பத்தை உருவாக்குவோம்; இந்தியப் பணிகளுக்காக ஏஐ தொழில்நுட்பத்தை உருவாக்குவோம்’ என்ற மத்திய அரசின் திட்டத்தின் கீழ் இந்த ஆற்றல்சாா் மையங்கள் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்கென 2023-24 முதல் 2027-28 ஆண்டு வரையிலான கால கட்டத்துக்கு ரூ. 990 கோடிக்கும் மேலான நிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.

மீனவர் பிரச்னை, ஆளுநர் விவகாரத்தை மக்களவையில் எழுப்பிய தமிழக எம்.பி.க்கள்

நமது நிருபர்மக்களவையில் மீனவர்கள் பிரச்னை, தமிழக ஆளுநர் விவகாரம் உள்ளிட்டவற்றை தமிழக எம்.பி.க்கள் செவ்வாய்க்கிழமை எழுப்பினர்.மக்களவையில் செவ்வாய்க்கிழமை கேள்வி நேரம் முடிந்ததும் முக்கியப் பிரச்னைகளை அ... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் நக்ஸல்கள் வன்முறை 47% குறைந்துள்ளது: மத்திய அரசு தகவல்

கடந்த 2010 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2024 இல் சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்ஸல்களால் ஏற்பட்ட வன்முறை சம்பவங்கள் 47 சதவீதமும், பொதுமக்கள் உயிரிழப்பு 64 சதவீதமும் குறைந்துள்ளன என்று மக்களவையில் செவ்வாய்க்க... மேலும் பார்க்க

ஸ்டார்ட்-அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 10 லட்சமாக உயரும்: மத்திய அரசு

நாட்டில் தொழில் முனைவோரின் வளர்ச்சியை மேம்படுத்த எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் காரணமாக அடுத்த பத்து ஆண்டுகளில் அரசு பதிவு பெற்ற புத்தாக்க (ஸ்டார்ட்-அப்) நிறுவனங்களின் எண்ணிக்கை 10 லட்சமாக உயரும் என... மேலும் பார்க்க

வாஷி பகுதியில் தமிழ்நாடு அரசு இல்லம் அமைக்க வேண்டும்: மகாராஷ்டிர ஆளுநரிடம் நவிமும்பை தமிழ்ச் சங்கம் கோரிக்கை

நவிமும்பையில் தமிழ்நாடு அரசு இல்லம் அமைக்க வேண்டும் என்று நவிமும்பை தமிழ்ச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.இது தொடர்பாக மஹாராஷ்டிர மாநில ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணனை தமிழ்ச் சங்க நிர்வாகிகள் திங்கள்கிழம... மேலும் பார்க்க

பிகாா்: ஏசி பெட்டியில் ஏற கண்ணாடியை உடைத்த இருவா் கைது

பிகாா் மாநிலம், மதுபானி ரயில் நிலையத்தில் மகா கும்பமேளா நிகழ்வுக்கு செல்வதற்கு ரயிலில் ஏற முடியாத விரக்தியில் குளிா்சாதன (ஏசி) பெட்டியின் கண்ணாடியை அடித்து உடைத்த இருவா் கைது செய்யப்பட்டனா். உத்தர பிர... மேலும் பார்க்க

பிரம்மபுத்திராவில் பிரம்மாண்ட சீன அணை: இந்தியாவின் நீா் பாதுகாப்புக்கு பாதிப்பு

பிரம்மபுத்திரா நதியில் பிரம்மாண்ட அணையைக் கட்ட சீனா முடிவு செய்திருப்பது, இந்தியாவின் தண்ணீா் பாதுகாப்பு குறித்து மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளதாக மக்களவை காங்கிரஸ் குழு துணைத் தலைவா் கெளரவ் கோகோய் த... மேலும் பார்க்க