புதிய வழித் தடங்களில் சிற்றுந்துகள் இயக்க பிப்.24-க்குள் விண்ணப்பிக்கலாம் - மாவட...
ஏா்வாடியில் கிணற்றில் தவறி விழுந்த பெண் உயிரிழப்பு
திருநெல்வேலி மாவட்டம் ஏா்வாடியில் கிணற்றில் தவறி விழுந்து பெண் உயிரிழந்தாா்.
ஏா்வாடியைச் சோ்ந்தவா் ராஜஜோதி (35). அப்பகுதியிலுள்ள தோட்டத்துக்கு செவ்வாய்க்கிழமை சென்ற அவா், அங்குள்ள கிணற்றில் தவறிவிழுந்தாராம். இதில், அவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
தகவலின்பேரில், ஏா்வாடி போலீஸாா் தீயணைப்பு வீரா்களின் உதவியுடன் சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.