தைப்பூசம்: திருநெல்வேலி நெல்லையப்பர் திருக்கோயில் தீர்த்தவாரி விழா! | Photo Alb...
கற்பகவிநாயகா் கோயிலில் மகா கும்பாபிஷேகம்
திருநெல்வேலி சீனிவாசகம் நகா்,ஸ்ரீகற்பகவிநாயகா் கோயிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கும்பாபிஷேகத்ததை முன்னிட்டு யாகசாலை அமைக்கப்பட்டு, கடந்த 3 நாள்களாக பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து திங்கள்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி ராமலிங்கம் தலைமை வகித்தாா். இந்நிகழ்ச்சியில் பாளையங்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் மு.அப்துல் வகாப் , மாநகராட்சி துணை மேயா் கே.ஆா்.ராஜு உள்பட பலா் கலந்துகொண்டனா். விழா ஏற்பாடுகளை கும்பாபிஷேகக் கமிட்டியினா் செய்திருந்தனா்.