`கண்கொள்ளாக் காட்சி' - மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தெப்பத் திருவிழா | Photo Alb...
வயநாடு: புலியைத் தொடர்ந்து யானை, முழு கடையடைப்பிற்கு அழைப்பு! - என்ன நடக்கிறது?
வனங்கள் அடர்ந்த கேரள மாநிலத்தின் வயநாட்டில் பல ஆண்டுகளாக தொடர்ந்து மேற்கொள்ளப்படும் முறையற்ற வளர்ச்சிப் பணிகளின் காரணமாக வனப்பகுதிகள் துண்டுபட்டு கிடக்கின்றன. வனவிலங்குகளின் வாழிடங்கள் மற்றும் வழித்தடங்களில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியிருப்பதால் மனித - வனவிலங்கு எதிர்கொள்ளல்கள் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-11/b6p8havy/Screenshot20250211204957Video-Player.jpg)
காப்பி தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த ராதா என்ற பெண் கடந்த மாதம் புலி தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தார். அவரின் உடல் பாகங்களையும் அந்த புலி தின்றிருந்தது. மக்கள் கொந்தளிப்பில் இருந்த நிலையில், அந்த புலி வனத்துறையினரின் துப்பாக்கிச்சூட்டில் தப்பியது. பின்னர், அருகில் இருந்த குடியிருப்பு பகுதியில் மறுநாள் காலை சடலமாக மீட்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அடுத்த சில நாள்களில் வனத்துறையினர் மேற்கொண்ட ரோந்து பணியின் போது மூன்று புலிகள் இறந்து கிடப்பதைக் கண்டறிந்தனர். ஒரே நாளில் மூன்று புலிகள் உயிரிழந்த விவகாரம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தான் வயநாடு நூல்புழா பகுதியைச் சேர்ந்த பழங்குடி இளைஞர் மனு மற்றும் அவரின் மனைவி ஆகிய இருவரும்
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-11/6cr54v7y/Screenshot20250211200828WhatsApp.jpg)
நேற்று முந்தினம் இரவு கடைத்தெருவிற்குச் சென்று வீடு திரும்புகையில் யானை தாக்கியதில்... இளைஞர் மனு பரிதாபமாக உயிரிழந்துள்ளார். யானையிடம் இருந்து தப்பியோடி வனத்திற்குள் விடிய விடிய தவித்த அவரின் மனைவியை நேற்று காலை உயிருடன் மீட்டுள்ளனர். தொடர் வனவிலங்கு எதிர்கொள்ளல்களால் வனத்துறை மீது மக்கள் கொந்தளிப்பில் உள்ளனர். வயநாட்டில் முழு கடையடைப்பு நடத்த பல்வேறு அமைப்புகளும் அழைப்பு விடுத்துள்ளன. காவல்துறையினர் மற்றும் வனத்துறையினர் உள்ளுர் மக்களிடம் தொடர்ந்து சமரச பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.