புணேவில் மேலும் 5 பேருக்கு ஜிபிஎஸ் நோய் பாதிப்பு! பலி எண்ணிக்கை - 7
Bumrah : 'சாம்பியன்ஸ் டிராபியில் பும்ரா இல்லை!' - பிசிசிஐ அறிவிப்பு; காரணம் என்ன?
பிப்ரவரி 19 ஆம் தேதி முதல் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடக்கவிருக்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பும்ரா ஆடமாட்டார் என பிசிசிஐ அறிவித்திருக்கிறது.
சில நாட்களுக்கு முன்பு பிசிசிஐ சாம்பியன்ஸ் டிராபிக்கான முதற்கட்ட அணியை அறிவித்திருந்தது. அதில் பும்ராவின் பெயர் இருந்தது. ஆனால், அந்த அணியை அறிவித்த போதே பும்ரா காயத்திலிருந்து குணமடைந்தால் சாம்பியன்ஸ் டிராபி அணியில் தொடருவார் என்றுதான் கூறப்பட்டிருந்தது. மேலும், பிப்ரவரி முதல் வாரத்தில் பும்ரா குணமடையக்கூடும் என நம்பிக்கையும் தெரிவித்திருந்தனர்.
பிப்ரவரி 12 ஆம் தேதிக்குள் இறுதியான அணியை ஐ.சி.சி யையிடம் சமர்பிக்க வேண்டும். இறுதிக்கட்டத்தை நெருங்கிய போதும் பும்ரா இன்னும் முதுகு வலியிலிருந்து முழுமையாக குணமடையாததால் அவரை பிசிசிஐ சாம்பியன்ஸ் டிராபி அணியிலிருந்து நீக்கியிருக்கிறது. பும்ராவுக்கு பதில் ஹர்ஷித் ராணாவை அணியில் சேர்த்திருக்கிறார்கள். அதேமாதிரி, யஷஸ்வி ஜெய்ஸ்வாலையும் நீக்கிவிட்டு ஸ்பின்னரான வருண் சக்கரவர்த்தியை சாம்பியன்ஸ் டிராபியில் இணைத்திருக்கிறார்கள்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-01-24/4t4kmk64/IMG-20250124-WA0107.jpg)
சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணி: ரோஹித், விராட் கோலி, கில், ஸ்ரேயாஷ் ஐயர், பண்ட், கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்ட்யா, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா, ஷமி, அர்ஷ்தீப் சிங், ஜடேஜா, வருண் சக்கரவர்த்தி.