செய்திகள் :

150 மில்லியன் பார்வைகளைக் கடந்த கோல்டன் ஸ்பேரோ!

post image

நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தின் பாடல் யூடியூப்பில் 15 கோடி பார்வைகளைக் கடந்துள்ளது.

நடிகர் தனுஷ் இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம். இதில், தனுஷ் சகோதரியின் மகன் நாயகனாக அறிமுகமாகிறார். மேலும், மாத்யூ தாமஸ், அனிகா சுரேந்திரன் உள்ளிட்ட நடிகர்களும் நடித்துள்ளனர்.

இப்படத்தின் முதல் பாடலான, ‘கோல்டன் ஸ்பேரோ’ பாடல் சில மாதங்களுக்கு முன் வெளியானது. இதில், நடிகை பிரியங்கா மோகன் சிறப்பு தோற்றத்தில் நடனமாடியிருந்தார்.

இதையும் படிக்க: பெயிண்டராக தொடங்கிய வாழ்வு..! சூரி பகிர்ந்த விடாமுயற்சி விடியோ!

ஜிவி பிரகாஷ் இசையமைப்பில் அறிவு வரிகளில் தனுஷ், ஜி.வி. பிரகாஷ், அறிவு மற்றும் சுப்லாஷ்லினி உள்ளிட்டோர் பாடிய இப்பாடல் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதுடன் இன்ஸ்டாகிராமில் பலரும் மடிசார் புடவையில் ரீல்ஸ் செய்து வைரலாக்கினர்.

தற்போது, இப்பாடல் யூடியூப்பில் 15 கோடி (150 மில்லியன்) பார்வைகளைக் கடந்து அசத்தியுள்ளது.

ஜேசன் சஞ்சய் படத்தின் அப்டேட்!

ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.நடிகர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கவுள்ள படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. இதற்கான, முன்தயாரிப்புப் பணிகளில் சஞ்... மேலும் பார்க்க

புதிய படத்தை தயாரித்து இயக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!

இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அடுத்ததாக தானே தயாரித்து படம் இயக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.தனுஷை வைத்து இயக்கிய 3 திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதற்கடுத்து வை ராஜா வை படம் கலவையான விமர... மேலும் பார்க்க

மாகி பௌர்ணமி: ஹரித்வாரில் திரளானோர் புனித நீராடல்!

மாகி பௌர்ணமியை முன்னிட்டு ஹிரித்வாரில் உள்ள கங்கை நதியில் திரளான பக்தர்கள் புனித நீராடி பிரார்த்தனை செய்தனர். இதற்கிடையில், மகா கும்பமேளா நடைபெறும் திரிவேணி சங்கமத்தில் ஒரு மாத காலத்துக்கு தங்கியிருந்... மேலும் பார்க்க

மத்திய அரசு ரொக்கப் பரிசை நிறுத்தியது பொருத்தமானதல்ல - அா்ஜுன் எரிகைசி

கிராண்ட்மாஸ்டா், இன்டா்நேஷனல் மாஸ்டா் பட்டங்களை அடைவோருக்கு ரொக்கப் பரிசு வழங்குவதை நிறுத்துவதென மத்திய அரசு மேற்கொண்ட முடிவு பொருத்தமானதல்ல என இந்திய கிராண்ட்மாஸ்டா் அா்ஜுன் எரிகைசி தெரிவித்தாா்.கிரா... மேலும் பார்க்க

கௌஃப் அதிா்ச்சித் தோல்வி; பாலினி, ரைபகினா முன்னேற்றம்

அமீரகத்தில் நடைபெறும் கத்தாா் ஓபன் மகளிா் டென்னிஸ் போட்டியில், முன்னணி வீராங்கனையான அமெரிக்காவின் கோகோ கௌஃப் 2-ஆவது சுற்றில் அதிா்ச்சித் தோல்வி கண்டாா். இத்தாலியின் ஜாஸ்மின் பாலினி, கஜகஸ்தானின் எலனா ர... மேலும் பார்க்க

தமிழகத்துக்கு ஒரே நாளில் 3 தங்கம்

உத்தரகண்டில் நடைபெறும் 38-ஆவது தேசிய விளையாட்டுப் போட்டிகளில் தமிழகத்துக்கு செவ்வாய்க்கிழமை 3 தங்கப் பதக்கங்கள் கிடைத்தன. ஆடவா் மும்முறை தாண்டுதலில் பிரவீண் சித்ரவேல் 16.50 மீட்டருடன் முதலிடம் பிடித்த... மேலும் பார்க்க