ரயானுடன் ஆன்மிக சுற்றுலாச் சென்ற பவித்ரா!
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமடைந்த ரயான் மற்றும் பவித்ரா ஜனனி இருவரும் ஆன்மிக சுற்றுலா சென்றுள்ளனர்.
பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் டாப் 5 போட்டியாளர்களில் இருவர் பவித்ரா ஜனனி மற்றும் ரயான். தொடர்ந்து, இந்நிகழ்ச்சியில் முதலில் ரயான் வெளியேறிய நிலையில், இவரைத் தொடர்ந்து பவித்ரா ஜனனி வெளியேறினார்.
![](https://media.assettype.com/dinamani/2025-02-12/xg5csufu/pavithra.janani173919256335649280663111037868126684444.jpg)
சமீபத்தில் நடந்துமுடிந்த பிக் பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் 24 பேரும் பங்கேற்று இருந்தனர்.
நடிகை பவித்ரா ஜனனி ஆன்மிக தலங்களுக்கும், இயற்கை சூழல்கொண்ட இடங்களுக்கும் சென்று வருவது வழக்கமான ஒன்று. இதை அவர் பிக் பாஸ் வீட்டில் இருக்கும்போதே கூறியிருந்தார்.
இதையும் படிக்க: புதிய படத்தை தயாரித்து இயக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!
இந்த நிலையில், ரயான் மற்றும் பவித்ரா ஜனனி இருவரும் பர்வத மலைக்குச் சென்றுவந்துள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் விடியோக்களை பவித்ரா ஜனனி வெளியிட்டுள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றது.
![](https://media.assettype.com/dinamani/2025-02-12/mfei51x9/pavithra.janani173919256335649280659839305818126684444.jpg)
பவித்ரா ஜனனி தனது இன்ஸ்டாகிராம் பதிவில், “நான் என்னுடைய இடத்திற்கு சென்று வந்துவிட்டேன். அனுபவம் எப்படி ரயான் ” என்று பதிவிட்டு இருந்தார். இதற்கு பதில் அளிக்கும் வகையில் ரயான், “மிக சிறந்த அனுபவம். எப்படியோ உன்னை அழைத்துச் சென்று வந்துவிட்டேன்” என்று பதிவிட்டுள்ளார்.
ரயான் மற்றும் பவித்ராவின் ஆன்மிகப் பயணம் குறித்து ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.