செய்திகள் :

பிப். 17-ல் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஆலோசனை!

post image

வருகிற பிப். 17 ஆம் தேதி முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்ஸின் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுக் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி சென்னை உயர்நீதிமன்றம் இன்று (பிப். 12) உத்தரவிட்டுள்ளது.

அதிமுக விவகாரத்தை தேர்தல் ஆணையம் விசாரிக்க விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி, ஓ.பி. ரவீந்திரநாத், புகழேந்தி, கே.சி. பழனிசாமி உள்ளிட்டோர் தாக்கல் செய்திருந்த மனுவின் மீதான விசாரணையின் முடிவில், நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

அதன்படி, அதிமுக உள்கட்சி விவகாரம், இரட்டை இலை சின்னம், புதிய தலைமை ஆகியவை குறித்து தேர்தல் ஆணையம் விசாரிக்க எந்தவித நிபந்தனையும் இல்லை என நீதிமன்றம் கூறியுள்ளது ஓபிஎஸ் தரப்புக்கு ஆதரவாகப் பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இந்த தீர்ப்பினை வரவேற்பதாக முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் கூறியிருந்தார்.

தொடர்ந்து அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் பிப். 17 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | தமிழகத்திற்கு அண்ணாமலை நிதி பெற்றுத் தரலாமே! - அன்பில் மகேஸ்

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:

"அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் கழக அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ச. இராமச்சந்திரன் தலைமையில், சென்னை எக்மோர், பாந்தியன் சாலை, அசோகா ஹோட்டலில் உள்ள டாக்டர் கேபிஎம் ஹாலில் 17-02-2025 திங்கட்கிழமை மாலை 5 மணியளவில் நடைபெறும். அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

கழக ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஒப்புதலோடு இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய எல்லையில் 1.1 கிலோ போதைப் பொருள் பறிமுதல்! 2 பேர் கைது!

பஞ்சாப் மாநிலத்திலுள்ள இந்திய எல்லையில் 1.1 கிலோ அளவிலான போதைப் பொருள் கடத்த முயன்ற 2 பேர் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.எல்லைப் பாதுகாப்புப் படையினருக்கு கிடைத்த ரகசியத் தகவலின் அடி... மேலும் பார்க்க

காதலர் நாள்: திரையரங்குகளில் வெளியாகும் 10 படங்கள்!

காதலர் நாளை கொண்டாடும் வகையில் திரையரங்குகளில் வரும் பிப். 14 ஆம் தேதி 10 படங்கள் வெளியாகவுள்ளன.இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், நவீன இளைஞர்களின் காதலைப் பேசும் படமாக உருவாகியுள்ள திரைப்படம் ’2கே லவ... மேலும் பார்க்க

லிபியா சிறையிலிருந்து 24 அகதிகள் விடுதலை!

வட அப்பிரிக்க நாடான லிபியாவின் சிறையிலிருந்து 24 அகதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.தலைநகர் திரிப்பொலியிலுள்ள அபுஸ்லியென் சிறையிலிருந்து அந்நாட்டில் தஞ்சம் புகுந்த பெண்கள் குழந... மேலும் பார்க்க

சிறுமியைக் கட்டாயப்படுத்தி பிச்சையெடுக்க வைத்த பெற்றோர் மீது வழக்கு!

மகாராஷ்டிர மாநிலம் தாணே மாவட்டத்தில் 17 வயது சிறுமியை கட்டாயப்படுத்தி பிச்சையெடுக்க வைத்த பெற்றோர் மீது அம்மாநில காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.தாணேவின் கல்வா பகுதியைச் சேர்ந்த தம்பதி தங்... மேலும் பார்க்க

தேர்தல் ஆணையர்கள் நியமன வழக்கு: விசாரணை பிப். 19-க்கு மாற்றம்!

தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் மத்திய அரசு கொண்டுவந்த புதிய சட்டத்தின்படி நியமனம் செய்யப்படுவதற்கு எதிராக தொடரப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை பிப். 19 ஆம் தேதிக்கு எடுத்துக்கொள்ளப்படும் ... மேலும் பார்க்க

இந்தியாவின் எரிசக்தி துறையில் ஏராளமான முதலீடுகளுக்கு வாய்ப்பு: பிரதமர் மோடி

இந்தியாவில் பல கண்டுபிடிப்புகள் மற்றும் உள்கட்டமைப்பு காரணமாக, இயற்கை எரிவாயு விநியோகம் அதிகரித்து வருவதால் எதிர்காலத்தில் இயற்கை எரிவாயு பயன்பாடு அதிகரிக்க வழிவகுக்கும் என்றும் இந்தத் துறைகளில் ஏராளம... மேலும் பார்க்க