செய்திகள் :

சாம்பியன்ஸ் லீக்கில் சாதனை படைத்த எர்லிங் ஹாலண்ட்..!

post image

மான்செஸ்டர் சிட்டி கால்பந்து வீரர் எர்லிங் ஹாலண்ட் சாம்பியன்ஸ் லீக்கில் புதிய சாதனை படைத்துள்ளார்.

சாம்பியன்ஸ் லீக் பிளே -ஆஃப் லெக் 1 போட்டியில் ரியல் மாட்ரிட், மான்செஸ்டர் சிட்டி அணிகள் மோதின.

முதல் பாதியில் அசத்திய மான்செஸ்டர் சிட்டி அணி இரண்டாம் பாதியில் சொதப்பியது. குறிப்பாக கோல் கீப்பர் செய்த சிறிய சிறிய தவறுகளால் அந்த அணி 2-3 என்ற கோல்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

இந்தப் போட்டியில் மான்செஸ்டர் சிட்டி அணி வீரர் எர்லீங் ஹாலண்ட் 2 கோல்கள் அடித்து அசத்தினார்.

விரைவாக அதிக கோல்கள்

இதன் மூலம் 49 போட்டிகளில் 49 கோல்கள் அடித்து சாதனை படைத்துள்ளார்.

சாம்பியன்ஸ் லீக்கில் அதிகபட்சமாக கிறிஸ்டியானோ ரொனால்டோ 140 கோல்கள் அடித்துள்ளார். ஆனால், விரைவாக ஒரு போட்டியில் ஒரு கோல் என்ற விகிதத்தில் முன்னிலையில் இருக்கிறார்.

கிளியன் எம்பாப்வே 82 போட்டிகளில் 52 கோல்கள் அடித்துள்ளார். டாப் 10 வரிசைக்குள் எர்லிங் ஹாலண்ட் குறைந்த போட்டிகளில் இந்த வரிசைக்குள் நுழைந்துள்ளார்.

சமீபத்தில் எர்லிங் ஹாலண்டுக்கு மான்செஸ்டர் சிட்டி அணிக்காக 2034 வரை ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது

சாம்பியன்ஸ் லீக்கில் அதிக கோல்கள்

1. கிறிஸ்டியானோ ரொனால்டோ - 140

2. லயோனல் மெஸ்ஸி- 129

3. ராபர்ட் லெவண்டாவ்ஸ்கி - 103

4. கரீம் பென்சமா - 90

5. ரௌல் - 71

வயலின் எல்லாம் ரெடியா..? ரெட்ரோ முதல் பாடலின் புரோமா!

நடிகர் சூர்யா நடித்த ரெட்ரோ படத்தின் முதல் பாடலின் புரோமோ விடியோ வெளியாகியுள்ளது.நடிகர் சூர்யா - கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவான திரைப்படம் ரெட்ரோ.ஆக்சன் கலந்த காதல் கதையாக உருவாகியுள்ள இப்பட... மேலும் பார்க்க

மீண்டும் பெண் குழந்தை வேண்டாம்: சிரஞ்சீவி சர்ச்சை பேச்சு!

பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி பெண் குழந்தை பெற்றெடுப்பது குறித்துப் பேசிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் சிரஞ்சீவி தெலுங்கின் முன்னணி நடிகராக அறியப்படுபவர். 69 வயதான சிரஞ்சீவி இன்றும் ப... மேலும் பார்க்க

விக்ரம் பிரபுவின் புதிய பட போஸ்டர்!

நடிகர் விக்ரம் பிரபுவின் புதிய படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது. ஷண்முக பிரியன் இயக்கும் லவ் மேரேஜ் படத்தினை ஸ்வேதா, ஸ்ரீநிதி சாகர் தயாரிக்கிறார்கள். இதில் சுஸ்மிதா பட், மீனாக்‌ஷி தினேஷ்,... மேலும் பார்க்க

லிஜோ மோலின் ஜென்டில்வுமன் டீசர்!

லிஜோமோல், ஹரிகிருஷ்ணன் நடிப்பில் உருவாகியுள்ள ஜென்டில்வுமன் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.அறிமுக இயக்குநர் ஜோஸ்வா சேதுராமன் இயக்கத்தில் ஒரே ஆணுடன் உறவிலிருக்கும் இரு பெண்களின் கதையாக ஜென்டில்வுமன் தி... மேலும் பார்க்க

விஜய் தேவரகொண்டாவின் புதிய படம்: டீசர் வெளியீடு!

நடிகர் விஜய் தேவரகொண்டாவின் 12 வது திரைப்படமான ’கிங்டம்’ படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் தேவரகொண்டா நுவ்விலா என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். பின்னர் பெல்லி சூப்புலு... மேலும் பார்க்க

வினிசியஸை கிண்டலடித்து பேனர்..! மான்செஸ்டர் சிட்டியை இறுதிக் கட்டத்தில் வீழ்த்திய ரியல் மாட்ரிட்!

சாம்பியன்ஸ் லீக் போட்டியில் மான்செஸ்டர் சிட்டியை இறுதி நேரத்தில் ரியல் மாட்ரிட் வீழ்த்தி அசத்தியது.சாம்பியன்ஸ் லீக் பிளே -ஆஃப் லெக் 1 போட்டியில் ரியல் மாட்ரிட், மான்செஸ்டர் சிட்டி அணிகள் மோதின. முதல் ... மேலும் பார்க்க