செய்திகள் :

விழுப்புரம்: ``பெரியாரை யாராலும் வீழ்த்தவும் முடியாது; வெல்லவும் முடியாது..'' -எம்.பி கனிமொழி

post image

விழுப்புரம் தெற்கு மாவட்ட தி.மு.க மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டர் அணி ஆலோசனை கூட்டம், கலைஞர் அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய தி.மு.க எம்.பி கனிமொழி, ``பெண்களுக்கான உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டுமென்றால் தி.மு.க தலைமையிலான ஆட்சிதான் அமைய வேண்டும். இன்றைக்கு பெண்கள் பட்டம், பதவி ஆகியவற்றில் சிறந்து விளங்குகிறார்கள் என்றால் அதற்கு காரணம் தி.மு.க ஆட்சிதான். நீதிக்கட்சி ஆட்சியில்தான் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டது அதேபோல பெண்கள் 50% சதவிகிதம் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடலாம் என தமிழகத்தில் மட்டுமே சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

பெரியார்
பெரியார்

இன்னும் கூட பல்வேறு நாடுகளில் பெண்களுக்கு வாக்குரிமை இல்லை. எனவே பெண்கள் தி.மு.க அரசின் சாதனைகளான மகளிர் உரிமைத் தொகை, திருமண உதவித் திட்டம், கல்வி உதவித் தொகை ஆகியவற்றை வீடு வீடாக சென்று எடுத்துக் கூற வேண்டும். பெரியாரை யாராலும் வீழ்த்தவோ, வெல்லவோ முடியாது. தமிழகத்தில் உள்ள அனைத்து பெண்களின் மனதிலும் நீங்காத இடம் பிடித்தவர் தந்தை பெரியார். அதேபோல தமிழகத்தில் உள்ள அனைவருக்கும் திருக்குறள் தெரியும். அதனால் தமிழகத்துக்கு தேவையானது நீதி மட்டும்தான் என்பதை ஒன்றிய அரசு உணர வேண்டும்” என்றார்.

`ECI குமஸ்தா தான்' -கொதிக்கும் ADMK | சிக்கலில் இரட்டை இலை -பின்னணியில் BJP? | DMK Imperfect Show

இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோ ஃவில்,* எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்குப் பதிலளித்துப் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்? * `நிர்மலா சீதாராமன் வேறு கிரகத்தில் வாழ்கிறார்...' - நாடாளுமன்றத்தில் சாடிய பிரியங... மேலும் பார்க்க

Brazil: `வெள்ளி நிறம், கம்பீரமான திமில்..' ரூ.40 கோடிக்கு விலை போன இந்திய வம்சாவளி மாடு!

இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட பசு மாடு 2024-ம் ஆண்டு, உலகில் இதுவரை விற்பனையானதில் விலை மிகுந்த கால்நடைக்கான கின்னஸ் சாதனையைப் படைத்துள்ளது. 53 மாதம் வயதான நெல்லூர் இனத்தைச் சேர்ந்த மாடு, பிரேசிலில் ... மேலும் பார்க்க

அதிமுக உள்கட்சி விவகாரம்: ``தேர்தல் ஆணையத்திற்கு விசாரிக்க அதிகாரம் இல்லை" - சி.வி.சண்முகம் ஆவேசம்

அதிமுக பொதுச் செயலாளர் பதவி மற்றும் இரட்டை இலை சின்னம் தொடர்பான விவகாரத்தில் தேர்தல் ஆணைய விசாரணைக்குத் தடை விதிக்கக் கோரி எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி ... மேலும் பார்க்க

Doctor Vikatan: கருத்தடை மாத்திரைகளை எடுத்துக்கொண்டால், சரும அழகு மேம்படும் என்பது உண்மையா?

Doctor Vikatan: என்னுடைய தோழி வெளிநாட்டில் இருக்கிறாள். சமீபத்தில் இந்தியா வந்திருந்தபோதுஅவள் கருத்தடை மாத்திரைகளைப் பயன்படுத்துவதைப் பார்த்தேன். அது குறித்து விசாரித்தபோது, சரும அழகுக்காக அந்த மாத்தி... மேலும் பார்க்க

Doctor Vikatan: கூர்மையான பற்கள்... வாய்ப்புண், வாய்ப் புற்றுநோய்க்குக் காரணமாகுமா?

Doctor Vikatan:வாய்ப்புண் என்பது வாய்ப் புற்றுநோயின் அறிகுறியாக இருக்குமா... சாதாரண வாய்ப்புண்ணுக்கும் புற்றுநோய் புண்ணுக்குமான வித்தியாசங்களைஎப்படிக் கண்டறிவது... கூர்மையான பற்கள்வாய்ப் புற்றுநோயை ஏற... மேலும் பார்க்க