சமனில் முடிந்தும் அரையிறுதிக்கு முன்னேறிய கேரளா..! எப்படி சாத்தியம்?
Brazil: `வெள்ளி நிறம், கம்பீரமான திமில்..' ரூ.40 கோடிக்கு விலை போன இந்திய வம்சாவளி மாடு!
இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட பசு மாடு 2024-ம் ஆண்டு, உலகில் இதுவரை விற்பனையானதில் விலை மிகுந்த கால்நடைக்கான கின்னஸ் சாதனையைப் படைத்துள்ளது.
53 மாதம் வயதான நெல்லூர் இனத்தைச் சேர்ந்த மாடு, பிரேசிலில் உள்ள மினாஸ் கிரைஸில் 40 கோடி ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டுள்ளது. இதன் எடை கிட்டத்தட்ட 1101 கிலோ. சாதாரண நெல்லூர் மாட்டைவிட இரண்டு மடங்கு எடை அதிகம். வியடினா 19 எனப் பெயரிடப்பட்டுள்ள அந்த மாடு கால்நடை உலகின் பல சாதனைகளை முறியடித்துள்ளது.
அழகான பசுக்களுக்காக நடைபெறும் 'சாம்பியன் ஆஃப் தி வேர்ல்ட்' போட்டியில் மிஸ் சௌத் அமெரிக்கா பட்டத்தை வென்றது இந்த பசு.
போட்டியின் நடுவர்கள் இந்த பசுவின் கட்டுமஸ்தான தசை அமைப்பு, மரபணு தன்மை மற்றும் தனித்துவமான அம்சங்களால் ஆச்சரியப்பட்டுள்ளனர்.
வியாடினாவின் நேர்த்தியான வெள்ளி நிறமும், கம்பீரமான திமிலும் காண்பவர்களை கவர்ந்துள்ளது.
Brazil -ல் இந்திய மாடுகள்!
இந்தியாவைச் சேர்ந்த நெல்லூர் மாடுகள் வெப்பமண்டல காலநிலைக்கு உகந்தவை. என்பதால் பிரேசிலில் அதிகமாக வளர்க்கப்படுகிறது. இன்று உலகிலேயே அதிகமான நெல்லூர் மாடுகளைக் கொண்ட நாடாக பிரேசில் திகழ்கிறது.
இவற்றுக்கு இருக்கும் நோய் எதிர்ப்புத் திறன் இந்த கருக்களுக்கு மதிப்பை உயர்த்துகிறது. உலகம் முழுவதும் உள்ள இனப்பெருக்க திட்டங்களில் பேச்சுபொருளாகியிருக்கிறது வியாடினா 19.
பிரேசிலில் உள்ள மாடுகளில் 80 விழுக்காடு செபு என்ற இனத்தைச் சேர்ந்தவை. இந்த இனம் சில நூற்றாண்டுகளுக்கு முன்பு இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்டது.
நெல்லூர் மாடுகள் ஆந்திராவின் ஓங்கோல் இனத்தைச் சேர்ந்தவை. பிரேசில் கால்நடை துறையில் மிகப் பெரிய பங்களிப்பைச் செலுத்துகின்றன. கித்தட்டத்த 23 கோடி மாடுகள் இருப்பதாக அமெரிக்க வேளாண்மைத்துறை கூறுகிறது.