செய்திகள் :

ராகிங் புகார்: முதலாமாண்டு மாணவர்களின் அந்தரங்க உறுப்புகளில் டம்ப்-பெல்ஸ் தொங்கவிட்டுக் கொடுமை! -கல்லூரி முதல்வர் விளக்கம்

post image

கேரளத்தில் அரசு கல்லூரியில் மாணவர்கள் சிலர் ராகிங் கொடுமைப்படுத்துதலுக்குள்படுத்தப்பட்டுள்ளது பற்றி அக்கல்லூரியின் முதல்வர் விளக்கமளித்துள்ளார்.

கேரளத்தின் கோட்டயத்தில் உள்ள அரசு செவிலியர் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களின் அந்தரங்க உறுப்புகளில் சீனியர் மாணவர்கள் சிலர், உடற்பயிற்சிக்காகப் பயன்படுத்தப்படும் டம்ப்-பெல்ஸ்களை தொங்கவிட்டுக் கொடுமைப்படுத்தியதாகவும், காம்பஸ் மற்றும் பிற உபகரணங்களால் காயப்படுத்தியிருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், இது குறித்து அக்கல்லூரி முதல்வர்(பொறுப்பு) லினி ஜோசப் செய்தியாளர்களுடன் பேசியிருப்பதாவது:

“இதுபோன்ற ராகிங் கொடுமை குறித்து மாணவர்களால் கடந்த காலங்களில் எவ்வித புகார்களும் அளிக்கப்படவில்லை. இந்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமையன்றுதான் முதல் முறையாக ராகிங் புகார் ஒன்று மாணவர் தரப்பிலிருந்து அளிக்கப்பட்டுள்ளது.

ராகிங் கொடுமைக்கு உள்படுத்தப்பட்ட மாணவர்கள் உடல்ரீதியாக ஏதேனும் காயங்களோ அல்லது அசௌகரியங்களோ ஏற்படவில்லை. இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவர்கள் விடுதியைக் கண்காணிக்கும் பொறுப்பிலுள்ள ஆசிரியர்களிடமோ தங்கள் பெற்றோர்களிடமோ தெரிவிக்கவில்லை.

இந்த நிலையில், ராகிங் புகார் பெறப்பட்டவுடன், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்விவகாரம் குறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருப்பதுடன் அவர்களிடம் விசாரணைக்கக ஒப்படைக்கப்பட்டுள்ளது. மருத்துவக் கல்வி துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, ராகிங் கொடுமைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்சிகளும் கல்லூரியில் நடத்தப்பட்டுள்ளன.

கல்லூரி முதலாமாண்டு மாணவர்கள் அளித்துள்ள புகாரின் அடிப்படையில் காவல் துறை பதிந்துள்ள முதல் தகவல் அறிக்கையின்படி, இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நபர்கள் கடந்த நவ. 16-ஆம் தேதியன்று கல்லூரி முதலாமாண்டு மாணவர் ஒருவரை மிரட்டி, அவரிடமிருந்து ரூ. 800 தொகையை பறிமுதல் செய்துள்ளனர்.

அதன்பின், கல்லூரி விடுதியில் முதலாமாண்டு மாணவர்கள் தங்கியிருக்கும் அறைகளுக்குள் நுழைந்த அவர்கள், ‘சீனியர்களை மதிக்கமாட்டீர்களா..’ என்று அதட்டியபடி, அங்கிருந்த ஒரு மாணவரை கத்தியைக் காட்டி மிரட்டியிருப்பதுடன், இன்னொரு மாணவரின் கழுத்தில் சிகரெட்டால் சூடு வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த குற்றச்சாட்டின்கீழ், 5 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதையும் படிக்க :அரசு செவிலியர் கல்லூரியில் ராகிங் கொடுமை: 5 மாணவர்கள் கைது!

சீக்கியர்களுக்கு எதிரான கலவரம்: முன்னாள் காங்கிரஸ் எம்.பி. குற்றவாளி என தீர்ப்பு!

சீக்கியர்களுக்கு எதிராக 1984-ஆம் ஆண்டு நடைபெற்ற கலவரத்தில் இரட்டைக் கொலை வழக்கில் முன்னாள் காங்கிரஸ் எம்.பி. சஜ்ஜன் குமார் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. முன்னாள் பிரதமா் இந்திரா காந்தியி... மேலும் பார்க்க

பிரதமர் மோடியின் விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

பிரதமர் நரேந்திர மோடியின் விமானத்தை வெடிகுண்டு வைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தவுள்ளதாக மும்பை காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு செவ்வாய்க்கிழமை மிரட்டல் வந்துள்ளது.மேலும், அமெரிக்க பயங்கரவாதிகள் இந... மேலும் பார்க்க

சிசுவின் உடலைக் கடித்துத் தின்ற நாய்கள்: அரசு மருத்துவமனையில் அவலம்!

அரசு மருத்துவமனையில் பிறந்த பச்சிளங் குழந்தையின் உடலை நாய்கள் கடித்துக் குதறித் தின்றுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.உத்தரப் பிரதேசத்தின் லலித்பூரில் உள்ள மாவட்ட ... மேலும் பார்க்க

மாகி பௌர்ணமி: சங்கமத்தில் 1.60 கோடி பேர் புனித நீராடல்!

மாகி பௌர்ணமியை முன்னிட்டு பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் கிட்டத்தட்ட 1.60 கோடி பேர் புனித நீராடியதாக மாநில அரசு அறிக்கையில் தெரிவித்துள்ளது. உத்தரப் பிரதேசத்தில் 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைப... மேலும் பார்க்க

இலவசங்களால் மக்கள் உழைப்பதற்குத் தயாராக இல்லை: உச்ச நீதிமன்றம்!

தேர்தலுக்கு முன்பு கட்சிகள் இலவசங்களை வழங்குவதாக வாக்குறுதி அளிப்பது குறித்து உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. நகர்ப்புறங்களில் வீடற்றவர்கள் தங்குவதற்கான உரிமை தொடர்பான வழக்கு விசாரணை நீதிபதிகள்... மேலும் பார்க்க

ஆம் ஆத்மியிடமிருந்து விடுதலை பெற விரும்பும் பஞ்சாப்: பாஜக

பஞ்சாப் விரைவில் ஆம் ஆத்மி கட்சியிடமிருந்து விடுதலை பெறும் என பாஜக தலைவர் துஷ்யந்த் கௌதம் கூறியுள்ளார். இதுதொடர்பாக ஆங்கில ஊடகத் தளமான ஏஎன்ஐ-க்கு அவர் அளித்த பேட்டியில், பஞ்சாப் மக்கள் தாங்கள் ஏமாற்றப... மேலும் பார்க்க