ஆம் ஆத்மியிடமிருந்து விடுதலை பெற விரும்பும் பஞ்சாப்: பாஜக
பஞ்சாப் விரைவில் ஆம் ஆத்மி கட்சியிடமிருந்து விடுதலை பெறும் என பாஜக தலைவர் துஷ்யந்த் கௌதம் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக ஆங்கில ஊடகத் தளமான ஏஎன்ஐ-க்கு அவர் அளித்த பேட்டியில்,
பஞ்சாப் மக்கள் தாங்கள் ஏமாற்றப்பட்டதைப் புரிந்து கொண்டுள்ளனர். பஞ்சாப் மக்களும், எம்எல்ஏக்களும் ஆம் ஆத்மியிடம் இருந்து விடுதலை பெற விரும்புகிறார்கள். அதை நாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். பஞ்சாப் விரைவில் அவர்களிடமிருந்து விடுதலை பெறும் என்று நம்புகிறேன்.
முன்னதாக, முதல்வர் பகவந்த் மான் தலைமையிலான மாநிலத்தில் சிக்கல்கள் நிலவி வருவதாக குற்றம் சாட்டினார். குறிப்பாக சமீபத்திய தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் கேஜரிவால் தோல்வியடைந்தப் பிறகு அவருக்கு எதிராக போராட்டம் நடந்து வருகிறது.
செவ்வாய்க்கிழமை பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் மற்றும் மாநிலத்தைச் சேர்ந்த எம்எல்ஏக்களை கேஜரிவாலை சந்தித்தனர். சிலர் பஞ்சாபை "தங்கள் தனிப்பட்ட ஏடிஎம்" என்று கருதுவதாக ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த ஸ்வாதி மாலிவால் கடுமையாகச் சாடினார்.
தில்லியில் அரவிந்த் கேஜரிவாலுடன் ஆம் ஆத்மி எம்எல்ஏக்களின் சந்திப்பு குறித்துப் பேசிய மாலிவால், பஞ்சாப் எம்.எல்.ஏ.க்கள் மத்தியில் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் மீது கோபம் இருப்பதாக அவர் கூறினார்.
தில்லியில் தோல்வியடைந்ததால் அரவிந்த் கேஜரிவால் பஞ்சாபிற்கு குடிபெயர விரும்புகிறார். கேஜரிவால் பஞ்சாபிற்கு வருவது குறித்து பஞ்சாப் எம்எல்ஏக்கள் மத்தியில் கோபம் ஏற்பட்டது, எனவே கேஜரிவால் பஞ்சாப் எம்எல்ஏக்களுடன் ஒரு கூட்டத்தை நடத்தினார்.
பஞ்சாப் அரவிந்த் கேஜவாலுக்கு ஆட்சி அதிகாரம் அளித்தபோது, அவர் பஞ்சாபிற்கு என்ன செய்தார்?" என்று அவர் கேள்வி எழுப்பினார்.