உடலுறவு குறித்து சர்ச்சை கருத்து: மக்களை சிரிக்க வைப்பதே குறிக்கோள்! யூடியூபர் வ...
40 வயதில் ரிட்டையர் ஆவது எப்படி? இரட்டைச் சம்பளம் வாங்கும் இளம் தம்பதிகளுக்காக!
டயர்டாக இருக்கே கொஞ்ச நேரம் எக்ஸ்ட்ரா தூங்கலாம்னா நேத்து முடிக்கப்படாத வேலைகள் வாவான்னு அலுவலகத்துக்கு கூப்பிடும்.
அரக்கப்பரக்க ஒரு சாதம், ஒரு பொரியலைக் கட்டி கேரியரில் திணிச்சு, வேகாத வெயில்ல ஆபீஸ் போய், களேபரங்கள் பல கடந்து, திரும்பவும் கூட்ட நெரிசலை சமாளிச்சு வீட்டுக்கு வந்து படுத்தா... கணவன் மனைவி இருவரும் மனம் விட்டு பேச சில மணி நேரம் கூட கிடைக்காது. சந்தோஷத்தைத் தர வேண்டிய வேலை, தினசரி தலைவலியையே தருதுல்ல? சரி கண்ணு கலங்காதீங்க!
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-12/qeh0jbzs/istockphoto-1362265231-612x612.jpg)
எத்தனை நாள் இந்த ஓட்டம், இதுக்கு ஒரு எண்டே கிடையாதா?
கணவனும் மனைவியும் கைநிறைய சம்பாதிக்கிறீங்க, சமர்த்தா குடும்பம் நடத்துகிறீங்க, எல்லாம் சரியாகத்தான் போய்ட்டு இருக்கு... ஆனா ஏன் சீக்கிரம் ரிட்டையர் ஆகி உங்க மனசுக்குப் பிடிச்ச வேலைகள்ல ஈடுபடுவது பற்றி யோசிக்க மாட்றீங்க? நீங்க போனும்னு நினைச்ச ஹாலிடே, விளையாடணும்னு நினைச்ச நாய்க்குட்டி, வளர்க்கணும்னு நினைச்ச ரோஜா செடி, வாழ்வுக்கு நிறைவைத் தரும் உங்க ஃபேவரிட் ஹாபி... இதையெல்லாம் பண்ண வேணாமா? 60 வயசு வரைக்கும் ரிட்டைர்மென்டுக்கு வெயிட் பண்ணணும்னு உங்களுக்கு யார் சொன்னது? 40 வயதுகளில் எல்லாம் ரிட்டையர் ஆவது சாத்தியமான்னு கேட்டா, கொஞ்சம் முயன்றா யெஸ்! எப்படின்னு பார்க்கலாமா?
ஏன் 40 வயதுகளில் ரிட்டையர் ஆவது பற்றி நாம் யோசிப்பதே இல்லை?
கணவன் மனைவி இருவரும் வேலைக்குச் செல்லும் குடும்பங்கள்ல 'வேலை செய் - சம்பாதி - செலவு செய்', பிறகு திரும்பவும் அதையே செய் - இப்படியொரு சுழல்ல இருவரும் மாட்டிக்கிறாங்க. 60 வயதுதான் ரிட்டைர்மென்ட் காலம்னு யாரோ சொன்னது சப்கான்ஷியஸ்ல ஆழமா பதிஞ்சு இருக்கு. இதனால திட்டமிட்டு நிதி சேர்க்கும் வழிகளைப் பற்றி அவங்க யோசிக்கிறதே இல்ல! இதனால நீங்க படுற கஷ்டங்கள் என்ன தெரியுமா?
* வேலை தரும் ஆபீஸையும், பழைய பென்ஷன் திட்டங்களை மட்டுமே நம்பி இருக்கும் சூழ்நிலை.
* நல்ல வளர்ச்சியைத் தரும் முதலீட்டுத் திட்டங்களை மிஸ் செய்வது.
* நிதி சுதந்திரத்தைப் பத்தி யோசிக்காம மாதச் சம்பளத்தை மட்டுமே நம்பி வாழ்க்கையை ஓட்டுவது.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-12/07c0id67/istockphoto-1354839495-612x612.jpg)
ஸ்மார்ட்டா இன்வெஸ்ட் பண்ணா இளமையிலேயே ரிட்டையர் ஆகலாம்! இப்படித்தான்...
லைஃப்சைக்கிள் இன்வெஸ்ட்மென்ட் ஹைப்போதீஸிஸ் கூறுவது என்னன்னா இளம் தம்பதிகள் தங்களின் இளமைக் காலங்களில் மிகவும் ஆக்ரோஷமா பங்கு சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்யணும். வயது ஆக ஆக ரிஸ்க் குறைவான திட்டங்களுக்கு மாறிக்கணும். 'லாஸ் அவர்ஷென் பயாஸ்'னு ஒன்னு இருக்கு, நம்ம பணமெல்லாம் நஷ்டமாகிடுமோன்னு பயந்து லாபம் பத்தி சிந்திக்காமலே இருக்கும் மனநிலையை அது குறிக்கிது. இந்த மனநிலை இருந்தா ஒரு தெளிவான நீண்ட கால நிதித் திட்டமிடலை நம்மால செயல்படுத்தவே முடியாது!
ஆனா நீங்க திருமணம் ஆன அந்த மாசத்தில் இருந்தே முதலீட்டைத் துவங்கினா நீங்க நினைச்சதை விட வேகமாவே செல்வத்தை சேர்க்க முடியும். ஒரு விதையிலிருந்து ஒரு மரமும், பின்பு அதிலிருந்து பல்லாயிரம் விதைகளும், அதிலிருந்து ஆயிரமாயிரம் மரங்களும் வளர்றது மாதிரி கூட்டு வட்டி (Compound Interest) இன்னைக்கி நீங்க முதலீடு செய்யும் ஒவ்வொரு ரூபாயையும் வளர்த்து பெருக்கிடும் என்பதே அறிவியல் ரீதியிலான உண்மை!
நீங்க செய்ய வேண்டியது இதுதான்:
1. ரிட்டயர்மென்டுக்கு எவ்வளவு பணம் தேவை என்பதை முடிவு செய்யுங்க: நீங்க நினைச்ச வாழ்க்கைத் தரத்தை வாழவும், உங்க குடும்ப பொறுப்புகள் மற்றும் ஆசைகளை நிறைவேற்றவும் எவ்வளவு பணம் தேவை என்பதை முடிவு செய்யுங்க. (அது எவ்வளவுன்னு தெரியலையா, கொஞ்சம் பொறுங்க, அதுக்கான வழியையும் சொல்றோம்.)
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-12/4hnx3mkw/istockphoto_1319763314_612x612.jpg)
2. முதலீட்டைத் தாமதிக்காதீங்க, இடைவிடாது தொடருங்க: வெறும் சேமிப்பு என்னைக்குமே ஒருத்தரை பணக்காரர் ஆக்காது. ஆனா சரியான மியூச்சுவல் ஃபண்ட்ஸ், ஸ்டாக்ஸ் மற்றும் பிற முதலீடுகள் உங்களைப் பணக்காரர் ஆக்கும்.
3. மாதச் சம்பளத்தைத் தாண்டிய பாஸிவ் வருமானம்: வாடகை, டிவிடெண்ட்ஸ், ராயல்டி போன்ற பாஸிவ் வருமானம் உங்களை விரைவில் பணக்காரர் ஆக்கும்.
4. தொடர்ந்து போர்ட்ஃபோலியோவை கண்காணிப்பது: நாட்கள் போகப்போக அப்பப்போ நம் முதலீடுகளை, அதோட ரிட்டன், ரிஸ்க் மற்றும் நம்ம தேவைகளுக்குத் தகுந்த மாதிரி மாத்திக்கணும்.
சரி இவ்வளவு செய்யுறதுக்கும் நேரமும் வழிகாட்டலும் இல்லைன்னு ஃபீல் பண்றீங்களா? அதான் விகடன் 'லாபம்' இருக்கே!
ஏற்கெனெவே பிஸியான வாழ்க்கையைத்தான் வாழ்ந்துட்டு இருக்கோம். இதுல இயர்லி ரிட்டைர்மென்ட் சுமைய வேற ஏன் சேர்க்கணும்? விகடனின் புதிய நிறுவனமான 'லாபம்' நீங்க விரைவா ரிட்டைர் ஆவதற்கான அனைத்து வழிகாட்டலையும் வழங்குது... சிம்பிளா நீங்க செய்ய வேண்டியது:
ஸ்டெப் 1: உங்க விவரங்களைக் கொடுங்க: உங்களின் வருமானம், செலவுகள் மற்றும் உங்க கனவுகளை எங்களிடம் சொல்லுங்க.
ஸ்டெப் 2: உங்களுக்கான பிரத்தியேக திட்டத்தைப் பெறுங்க: உங்களின் கனவுகளை அடைய உதவும் சரியான மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் குறித்து எங்களின் நிபுணரிடம் கேட்டு தெரிஞ்சுக்கோங்க.
ஸ்டெப் 3: உங்க போர்ட்ஃபோலியோவின் செயல்பாட்டைப் பாருங்க: உங்க முதலீட்டுக் கலவையின் ரிட்டன் உங்களின் இலக்கோடு பொருந்தி வளருதான்னு நாங்க தொடர்ந்து கண்காணிச்சு உங்களுக்கு சொல்லுவோம்!
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-12/0tjq5m85/portrait_happy_smiling_mature_older_260nw_2421700451.webp)
முடிவெடுக்காம இருப்பதால் நஷ்டம்தான் மிச்சம். இப்போதே செயல்படுங்க!
ஒவ்வொரு வருஷமும் நீங்க முதலீட்டைத் தள்ளிப் போடும்போது உங்களுக்கு கிடைக்கும் லாபத்தை வேணாம்னு ஒதுக்குறீங்க. அது ஒருவகையில் நஷ்டமே. பல தம்பதிகள் இதை ரொம்ப ரொம்ப லேட்டாதான் உணர்றாங்க. நீங்க அவங்கள்ல ஒருத்தரா இருக்க வேண்டாம் ப்ளீஸ். உங்களின் கனவு வாழ்க்கையை வாழ உங்களுக்கான சரியான முதலீடுகளைத் தேர்ந்தெடுத்து, அதை தேவையானபோது மாற்றி அமைச்சு தருது விகடனின் 'லாபம்'.
சீக்கிரமா ரிட்டையர் ஆவது உங்க கனவா? அதை நனவாக்க இப்போவே, லாபம் வழங்கும் இளம் தம்பதிகளுக்கான கன்சல்டேஷனைப் பெற்று, லாபம் தளத்தில் முதலீட்டைத் துவங்குங்க. பிப்ரவரி மாதம் 25 நபர்களுக்கு மட்டுமே இதில் அனுமதி, முன்பதிவு அவசியம். உங்க பெயரை முன்பதிவு செய்ய, இந்தப் படிவத்தை ஃபில் பண்ணுங்க: https://forms.gle/Y4qv6JejadNwEKpc6
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-12/63rs6323/WhatsApp-Image-2025-02-12-at-6.48.51-PM.jpeg)
குறிப்பு: விகடன் வெல்த் பிரைவெட் லிமிடெட்/லாபம், AMFI அமைப்பின் கீழ் பதிவு செய்யப்பட்ட மியூச்சுவல் ஃபண்ட் விநியோக நிறுவனமாகும் - ARN-310095. மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. முதலீடு செய்யும் முன் திட்டம் சார்ந்த அனைத்து ஆவணங்களையும் சரியாகப் படித்துப் பார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.