ஸ்மாா்ட் மீட்டா்கள் பொருத்தம் 2026 மாா்ச்சுக்குள் நிறைவு: மத்திய அரசு தகவல்
'ரூ.12 லட்சத்திற்கு உயர்ந்த வருமான வரி சலுகை வரம்பு' - 'இந்த' 5 விஷயங்களை கட்டாயம் செஞ்சுடுங்க!
இந்தப் பட்ஜெட்டில் வருமான வரம்பு சலுகை ரூ.7 லட்சத்தில் இருந்து ரூ.12 லட்சமாக உயர்த்தியிருப்பது நடுத்தர மக்களுக்கு அடித்த ஜாக்பாட். ஆனால், அவர்களுக்கு 'இந்த சலுகை மூலம் கிடைக்கும் தொகையை என்ன செய்யலாம்?' என்ற கேள்வியும், குழுப்பமும் எழும். அதற்கான பதிலை தருகிறார் பொருளாதார நிபுணர் சுந்தரி ஜகதீசன்.
"வருமான வரி சலுகை வரம்பு உயர்த்தியிருப்பது நடுத்தர மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி. ஆனால், அரசின் இந்த அறிவிப்பு மூலம் அவர்களுக்கு கிட்டதட்ட ரூ.1 லட்சம் கோடி நஷ்டம் ஏற்படும். அப்படியிருக்கையில், 'இந்த அறிவிப்பு ஏன்?' என்றால் மக்கள் அந்த சலுகை பணத்தை செலவு செய்தால், அதன் மூலம் அரசு மறைமுக வரி பெறும். ஒருவேளை சேமித்தாலும், அரசு அதன் மூலமும் வருமானம் பெறும். ஆக, பெரிய அளவில் நஷ்டம் இருக்காது என்பது அரசாங்கத்தின் நம்பிக்கை.
இப்போது மக்கள் பக்கம் வருவோம்... இந்த சலுகை மூலம் கிடைக்கும் அத்தனை பணத்தையும் மக்கள் முழுவதுமாக சேமிக்க வேண்டும் என்பதில்லை...செலவு செய்ய வேண்டும் என்பதும் இல்லை.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-01-20/dsecmosr/Untitled-17.jpg)
இந்த இடத்தில் 50 - 30 - 20 ரூலை பயன்படுத்த வேண்டும். அதாவது உங்களுக்கு சம்பளம் பிளஸ் இந்த சலுகை மூலம் கிடைக்கும் பணத்தின் 50 சதவிகிதத்தை அத்தியாவசிய தேவைகளுக்கு பயன்படுத்துலாம். 30 சதவிகிதத்தை பொழுதுப்போக்கு மற்றும் தேவைகளுக்கு பயன்படுத்தலாம். 20 சதவிகிதத்தை சேமிப்பு அல்லது முதலீடுகளுக்கு பயன்படுத்த வேண்டும். இந்த ரூல் நமக்கு ஒழுக்கத்தை கொண்டுவர வேண்டும்.
1. டேர்ம் இன்ஷூரன்ஸ்:
மக்கள் ஏனோ இன்னமும் டேர்ம் இன்ஷூரன்ஸ் பக்கம் அதிகம் கவனம் செலுத்துவதில்லை. ஆனால், அது மிக மிக முக்கியம். எதாவது அசம்பாவித தருணத்தில் குடும்பத்திற்கு இந்த டேர்ம் இன்ஷூரன்ஸ் தான் வந்து கைகொடுக்கும். அதனால், இதை கட்டாயம் எடுத்துகொள்ள வேண்டும்.
2. மருத்துவக் காப்பீடு:
இப்போது மருத்துவத் துறையில் சிகிச்சைகளின் கட்டணம் அதிமாகிக்கொண்டே வருகிறது. கடைசி நேரத்தில், இந்த சிக்கலில் மாட்டிக்கொள்ளாமல் இருக்க முன்னரே மருத்துவக் காப்பீடு எடுத்துக்கொள்ளலாம். நமக்கு மட்டுமல்லாமல், குடும்பத்திற்கும் சேர்த்து எடுக்க வேண்டும்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2024-11-14/qnts1mi2/673568ebd4856.jpg)
3. ஓய்வுக்காலம்:
இப்போது இருக்கும் ஓடியாடி வேலை செய்யும் சக்தி, நமது ஓய்வுக்காலத்திலும் தொடருமா என்பது பெரிய கேள்வி. அதைவிட, இப்போதும் வேலை செய்துவிட்டு, ஓய்வுக்காலத்திலும் வேலைக்கு ஓடிக்கொண்டிருக்க வேண்டுமா என்பதையும் யோசிக்க வேண்டும். இதைத் தவிர்க்க, நமது மாத செலவுகளையும், பணவீக்கம் அளவையும் கணக்கிட்டு, நம் ஓய்வுக்காலத்திற்கு ஏற்ற முதலீடுகளை இப்போதே தொடங்கிவிட வேண்டும். 'எதில் முதலீடு செய்ய வேண்டும்?' என்ற கேள்வி எழுகிறதா?...அது தான் இருக்கவே இருக்கிறது பி.பி.எஃப் மற்றும் என்.பி.எஸ் திட்டம்.
4. தங்கம்:
இன்று மக்கள் மியூச்சுவல் ஃப்ண்ட், பங்குச்சந்தையை விட, தங்கத்தை தான் அதிகம் நம்புகிறார்கள். அதனால், தாராளமாக மக்கள் தங்கம் மற்றும் வெள்ளியில் முதலீடு செய்யலாம். சந்தை நிலவரப்படி, தங்கம் விலை குறைவதற்கான வாய்ப்புகள் இல்லவே இல்லை. அப்படியே குறைந்தாலும், ஓரேடியாக குறைந்துவிடாது...கொஞ்சம் தான் குறையும்.
இன்னொரு பக்கம், உலகில் உள்ள 90 சதவிகித தங்கம் வெட்டி எடுத்தாகிவிட்டது என்று தரவுகள் கூறுகின்றன. அப்படி பார்க்கையில், சப்ளைகள் குறையும்போது, தேவை அதிகரிக்கும். தேவை அதிகரிக்கும்போது விலையும் கூடும்.
மேலும், எலெக்ட்ரிக் வாகனங்களின் லித்தியம் பேட்டரிகளிலும் தங்கம் மற்றும் வெள்ளி பயன்படுத்தப்படுகிறது. அதனால், இப்போதே தங்கத்தின் தேவை தொடங்கிவிட்டது என்று எடுத்துகொள்ளலாம்.
தங்கத்தை நாணயம் அல்லது நகையாக வாங்கலாமா, பேப்பராக வாங்கலாமா என்ற கேள்வி இங்கே எழும். அது உங்கள் விருப்பம் மற்றும் வசதிக்கேற்ப முதலீடு செய்யலாம்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-06/dhjaoh03/steptodown.com866519.jpg)
5. மியூச்சுவல் ஃபண்ட்:
'மியூச்சுவல் ஃபண்ட் சந்தை சரிந்து வருகிறதே' என்ற சந்தேகமும், பயமும் மக்களிடையே இப்போது அதிகம் இருக்கிறது. சந்தை எப்படி குறைந்துள்ளதோ, அதேப்போல நிச்சயம் ஏற்றம் பெறும். அதனால், இதில் பயமோ, சந்தேகமோ கொள்ள வேண்டாம். அதனால், சந்தை இறங்கியிருப்பதை நல்ல சான்ஸாக எடுத்துகொண்டு, இப்போது அதிக யூனிட்டுகளை வாங்கலாம். சந்தை ஏறுமுகத்தை தொடும்போது, இந்த யூனிட்டுகள் உங்களுக்கு லாபத்தை அள்ளி தரும். எந்தத் துறையில் முதலீடு செய்யலாம் என்றில்லாமல், லார்ஜ் கேப், மிட் கேப், ஸ்மால் கேப் ஃபண்டுகளில் முதலீடு செய்யுங்கள் அதுவே அனைத்து துறைகளையும் உள்ளடக்கி விடும்.
'இதெல்லாம் என்கிட்ட ஏற்கனவே இருக்கு' என்பவர்கள், அந்தத் தொகையை உயர்த்துங்கள். ஹேப்பி ஸ்பெண்டிங்; ஹேப்பிங் சேவிங்க்ஸ்!" என்று முடிக்கிறார்.
Vikatan Play
இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்!
https://tinyurl.com/Velpari-Vikatan-Play