விக்ரம் பிரபுவின் புதிய பட போஸ்டர்!
நடிகர் விக்ரம் பிரபுவின் புதிய படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது.
ஷண்முக பிரியன் இயக்கும் லவ் மேரேஜ் படத்தினை ஸ்வேதா, ஸ்ரீநிதி சாகர் தயாரிக்கிறார்கள். இதில் சுஸ்மிதா பட், மீனாக்ஷி தினேஷ், ரமேஷ் திலக் நடித்துள்ளார்கள்.
இந்தப் படம் கோடை விடுமுறையில் வெளியாகுமென படக்குழு அறிவித்துள்ளது. இந்தப் படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைக்கவிருக்கிறார்.
ஏற்கனவே விக்ரம் பிரபு இயக்குநர் வெற்றி மாறனின் இணை இயக்குநரான சுரேஷ் இயக்கத்தில் புதிய படத்தில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது.
டாணாக்காரன் இயக்குநர் தமிழ் இப்படத்தின் கதையை எழுதியுள்ளார். செவன் ஸ்கிரீன் லலித் குமார் தயாரிக்கும் இப்படத்தில் லலித்தின் மகனும் நடிகராக அறிமுகமாகிறார்.
படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்க பிலோமின் ராஜ் எடிட்டராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
![](https://media.assettype.com/dinamani/2025-02-12/9hw232bd/GjljOK7WEAAfhgT.jpg)