உக்ரைனுக்கான உதவிகளை அதிகப்படுத்த நேட்டோவிடம் அமெரிக்கா வலியுறுத்தல்!
சிறுமியைக் கட்டாயப்படுத்தி பிச்சையெடுக்க வைத்த பெற்றோர் மீது வழக்கு!
மகாராஷ்டிர மாநிலம் தாணே மாவட்டத்தில் 17 வயது சிறுமியை கட்டாயப்படுத்தி பிச்சையெடுக்க வைத்த பெற்றோர் மீது அம்மாநில காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தாணேவின் கல்வா பகுதியைச் சேர்ந்த தம்பதி தங்களது 17 வயது மகளை தாணே ரயில் நிலையத்தில் பிச்சையெடுக்க கட்டாயப்படுத்தி, அவர் பிச்சையெடுப்பதின் மூலம் வரும் பணத்தை செலவு செய்து வாழந்து வந்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த பிப்.10 இரவு ரயில் நிலையத்தில் பிச்சையெடுத்து வந்த சிறுமியை அம்மாநிலத்தைச் சேர்ந்த குழந்தைகள் நலக் குழுவினர் கண்டுபிடித்து, காவல் துறையினரை அணுகியுள்ளனர்.
இதையும் படிக்க: இந்தியாவின் எரிசக்தி துறையில் ஏராளமான முதலீடுகளுக்கு வாய்ப்பு: பிரதமர் மோடி
அப்போது, அவர்கள் நடத்திய விசாரணையில் அந்த சிறுமியின் பெற்றோர் அவரை பிச்சையெடுக்க கட்டாயப்படுத்தியதுடன், போதைத் தரும் பானங்களை வற்புறுத்தி குடிக்க செய்ததும் தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, அச்சிறுமி காப்பகத்திற்கு அனுப்பப்பட்டதுடன், அவரது பெற்றோர் மீது குழந்தைகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தாணே காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.