சிசுவின் உடலைக் கடித்துத் தின்ற நாய்கள்: அரசு மருத்துவமனையில் அவலம்!
இளம் வீரர்களுடன் களமிறங்கிய ஆஸி..! 214 ரன்களுக்கு ஆட்டமிழந்த இலங்கை!
இலங்கை அணி முதல் ஒருநாள் போட்டியில் 214 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
டெஸ்ட் தொடரை 2-0 என முழுமையாக வென்ற ஆஸி. அணி இலங்கையுடனான முதல் ஒருநாள் போட்டியில் பந்துவீச்சை செய்தது.
முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 46 ஓவர்கள் முடிவில் 214 ரன்கள் மட்டுமே எடுத்தது.
அதிகபட்சமாக இலங்கை கேப்டன் அசலங்கா 127 ரன்கள் எடுத்து அசத்தினார்.
அனுபவமிக்க வீரர்கள் இல்லாமல் இளம் வேகப் பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கிய ஆஸி. அணியில் ஷான் அப்பாட் 3, ஸ்பென்சர் ஜான்சன், ஆரோன் ஆர்டி, நாதன் எல்லிஸ் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்கள்.
தற்போது, ஆஸி. அணி 4 விக்கெட்டுகளை இழந்து 45 ரன்கள் எடுத்துள்ளது. களத்தில் லபுஷேன், அலெக்ஸ் கேரி விளையாடி வருகிறார்கள்.